அரிமா சங்கம் நடத்திய ஆசிரியர் பயிற்சி முகாமில் விஸ்டம் பப்ளிக் பள்ளி ஆசிரியையர் முதலிடம் பெற்றுள்ளனர். இதுகுறித்த அப்பள்ளியின் செய்தியறிக்கை:-
கடந்த ஜனவரி 8 தேதி முதல் 10 தேதி வரை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச அரிமா சங்கத்தின் SOUTHERN INDIA MULTIPLE DISTRICT LIONS QUEST FOUNDATION (SILQF) அமைப்பினரால் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் விஸ்டம் பப்ளிக் பள்ளி ஆசிரியைகள் முதலிடம் பெற்றனர்.
"SKILLS FOR ADOLESCENCE" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த முகாமில் பன்னிரெண்டு பள்ளிகளிலிருந்து முப்பத்தி ஆறு ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் .
இந்தப் பயிற்சி முகாமில் வளர் இளம் பருவத்தினரின் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வெளிக்கொணர்வது , அவர்கள் எதிர் நோக்கும் நவீன சவால்களை வெற்றி கொள்ள தன்னம்பிக்கை உடையவர்களாக வார்த்தெடுப்பது , சமூக தீமைகளை விட்டும் பாதுகாத்து நற் பண்புள்ளவர்களாய் உருவாக்குவது , கல்வியில் சிறந்து விளங்கிடும் வண்ணம் இளைய தலைமுறையை கட்டமைப்பது ,போன்ற பல் வேறு பட்ட பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
விஸ்டம் பள்ளியிலிருந்து ஆசிரியைகள் அஹ்மத் பர்ஹா மற்றும் ஹமீதா முபீதா ஆகியோர் கலந்து கொண்டு முதல் தரத்தில் தேர்வு பெற்றனர்.
மேலும் பயிற்சியின் முடிவில் பயிற்றுனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான ஐந்து ஆசிரியர்களில் ஒருவராக பள்ளியின் ஆசிரியை ஹமீதா முபீதா சிறப்பிடம் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சிறந்த முறையில் பயிற்சியை நிறைவு செய்து வந்த ஆசிரியைகளை பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியைகள் அனைவரும் பாராட்டினர் .
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.I.புகாரீ
(அறங்காவலர் - விஸ்டம் பப்ளிக் பள்ளி)
விஸ்டம் பப்ளிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|