ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸாவின் தம்பி சொளுக்கு எம்.ஏ,ஷெய்கு அப்துல் காதிர், நேற்று (10.02.2016. புதன் கிழமை) 23.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 49.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துபை காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
எமது துபை காயல் நல மன்றத்தின் அலுவலகப் பொறுப்பாளர், ஜனாப் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸா அவர்களின் இளைய சகோதரர், ஜனாப் சொளுக்கு எம்.ஏ,ஷெய்கு அப்துல் காதிர் அவர்கள், நேற்று (10.02.2016. புதன்கிழமை) 23.30 மணியளவில் இறைக் கட்டளைப்படி காலமானார் என்ற செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல ரஹ்மான் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக, ஆமீன்
அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் (குறிப்பாக சகோதரர்கள் சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் ஈஸா, சொளுக்கு எம்.ஏ.ஜாஃபர் ஸாதிக் ஆகியோருக்கு) எமது துபை காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
இம்மாபெரும் இழப்பை பொருந்திக்கொள்ளும் மன வலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள துஆ செய்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(செயலாளர், துபை காயல் நல மன்றம்)
படம்:
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ Y.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[புகைப்படம் இணைக்கப்பட்டது @ 4:50 pm / 11.02.2016] |