காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA வின் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 8 அன்று நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக, அதன் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ்
வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இறையருளால், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA வின் செயற்குழுக் கூட்டம், 08.02.2016. திங்கட்கிழமையன்று 20.15
மணிக்கு, ஆஸாத் தெருவிலுள்ள KEPA அலுவலக கூட்டரங்கில், அதன் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா
தலைமையில் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ
வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலை மீது KEPA சார்பில், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில்
தொடரப்பட்டுள்ள வழக்கின் நடப்பு நிலை குறித்து, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா விளக்கிப் பேசி, பங்கேற்றோரின் சந்தேகங்களுக்கும்
விளக்கமளித்தார்.
கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலை மீது KEPA சார்பில், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில்
தொடரப்பட்டுள்ள வழக்கின் வாதங்கள் நிறைவுற்று, இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளிவரவுள்ளதால், அத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு
சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட கருணையுள்ள இறைவனைப் பிரார்த்திக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதென இக்கூட்டம்
தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால்
இனிதே நிறைவுற்றது.
கூட்டத்தின் போது, நிலுவையில் உள்ள உறுப்பினர் சந்தாவும் வசூல் செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், விடுமுறையில் ஊர் வந்திருக்கும் உலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் சிறப்பு விருந்தினராகவும், KEPA செயற்குழு உறுப்பினர்கள்
பங்கேற்பாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|