சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 51ஆவது பொதுக்குழுக் கூட்டம், 05.02.2016. வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில், அதன் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ரியாத் காயல் நல மன்றத்தின் 51-வது பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்
அன்பார்ந்த ரியாத் காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கு....
எமது மன்றத்தின் 51-வது பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று பத்ஹாவில் உள்ள ஷிபா அல் ஜஸீரா பாலி கிளினிக் கட்டிடத்தின் 3-ம் மாடியில் உள்ள பார்ட்டி ஹாலில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
ரியாத் மற்றும் சுற்றியுள்ள நகரத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து நமதூருக்கு செய்யும் சேவைகளில் தங்களையும் இணைத்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) மூலம் ஏற்கனவே அழைப்பு விடுத்த போதிலும், கிடைக்கப் பெறாதவர்கள் இதை முறையான அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இடம்: ஷிபா அல் ஜஸீரா பாலி கிளினிக் பார்ட்டி ஹால் (3-ம் மாடி), பத்ஹா
நாள்: 05-பிப்ரவரி-2016 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 5.00 முதல் 8.30 இரவு வரை...
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஊடகக் குழு, ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (50ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |