காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 28, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5563]
வெள்ளி, ஐனவரி 28, 2011
ஜலாலிய்யா நீர்த்தேக்கத் தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் அனிதா திறந்து வைத்தார்!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி வளாகத்திலுள்ள ஜலாலிய்யா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை திறந்து வைத்தார்.
திறப்பு விழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை 05.00 மணிக்கு மஸ்ஜித் மீக்காஈல் பின்புறத்தில் நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி வளாகத்திலுள்ள ஜலாலிய்யா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை திறந்து வைத்தார்.
திறப்பு விழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை 05.00 மணிக்கு மஸ்ஜித் மீக்காஈல் பின்புறத்தில் நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
மஸ்ஜித் மீக்காஈல் இமாம் மவ்லவீ முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்குதம்பி வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் நெய்னார் தெரு, கீழ நெய்னார் தெருவிலுள்ள சாலை, மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியையொட்டியுள்ள சாலை ஆகிய இடங்களில் புதிய சாலைகள் அதைத் தர வேண்டும் என அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினரிடம் கோரினார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய நகர்மன்ற உறுப்பினர் எம்.என்.சொளுக்கு, புதிய சாலைக்காக கோரப்பட்டுள்ள சில பகுதிகள் அனுமதி பெறாத மனைப்பிரிவின் கீழ் வருவதாகவும், அவ்விடங்களில் சாலை போடுவதென்பது தற்சமயம் சாத்தியமற்றது என்றும், எனினும் இதர பகுதிகளான நெய்னார் தெரு, கீழநெய்னார் தெரு, சதுக்கைத் தெரு ஆகிய பகுதிகளில், ஏற்கனவே டெண்டர் விட்டுள்ளதன் அடிப்படையில் இன்னும் இருபது தினங்களில் புதிய சிமெண்ட் சாலை போடப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
திறக்கப்படவுள்ள நீர்த்தேக்கத் தொட்டி குறித்து தெரிவித்த அவர், மொத்த செலவுத் தொகையில் ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் தொகை நகர்மன்ற பொதுநிதியிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அவரைத் தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
காயல்பட்டினத்தில் ரூபாய் முப்பது கோடி செலவில் இரண்டாம் பைப்லைன் கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அது நிறைவேற்றப்பட்டுவிட்டால் நகரிலுள்ள குடிநீர் பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் என்றும், தனது ஆயுளிலேயே ஒரு மகத்தான காரியத்தைச் செய்த பெருமிதம் தனக்குக் கிட்டும் என்றும், அதை தனது வாழ்நாள் சாதனையாகக் கருதப்போவதாகவும் தெரிவித்தார்.
திறக்கப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது எனவும், இதற்காக ரூபாய் எட்டரை லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் அவர் ஜலாலிய்யா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன் பின், ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ நன்றி கூற அத்துடன் விழா நிறைவுற்றது.
திறப்பு விழாவில், அப்பகுதி பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
|