இந்தியாவின் 67ஆவது குடியரசு நாள் 26.01.2016. அன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில், அன்று காலையில் குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது.
வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமை தாங்கினார். எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), பேராசிரயர் கே.எம்.எஸ்.சதக் தம்பி, பள்ளி செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ, வி.ன்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.அப்துல் ஹக், எம்.டீ.ஜாஃபர் ஸாதிக், ஐ.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர்களான ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப், எக்ஸ்.எல்பர்ட் வாஸ் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். மாணவர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முத்து அஹ்மத் அர்ஷத் கிராஅத் ஓத, பள்ளியின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எம்.கே.ஷெரீஃப் வரவேற்றுப் பேசினார்.
பள்ளி தலைமையாசிரியர் கே.ஷாஹுல் ஹமீத் தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு பொதுத்தேர்வுகளில் பள்ளியளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும், அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் இவ்விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஜி.செய்யித் அப்துல் காதிர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படம்:
M.பீர் முஹம்மத் ஹுஸைன்
ஜெ.நியாஸ்
(ஆசிரியர்கள், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி)
கடந்தாண்டு (2015) சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் கொடியேற்றம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|