Re:...நல்ல தீர்ப்பு வரட்டும்.... posted bymackie noohuthambi (kayalpatnam )[13 February 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43102
நல்ல தீர்ப்பு வரட்டும் என்று காயல்பட்டின மக்கள் து ஆ செய்கிறார்கள். அல்லாஹ் கபூல் செய்வானாக.
அதே நேரம் இங்கு வழங்கப் படும் தீர்ப்புக்கள் எல்லாம் சாட்சிகள் ஆதாரங்கள் அடிப்படையில் வழங்கப் படுபவை. வழக்கறிஞர் வாதத்திறமையால் பொய்யும் மெய்யாக சித்தரிக்கப்படும் காலம் இது.
நீதி பதிகளும் மனிதர்கள்தான். நாட்டில் உள்ள சட்டங்கள், ஏற்கெனெவே இதுபோன்ற வழக்குகளில் என்ன முறை கையாளப்பட்டுள்ளது என்பதையும் நீதிபதிகள் ஆராய்ந்து அவர்களுக்கு சரி என்று மனதில் படுவதை தீர்ப்பாக வழங்குவார்கள்.
நமக்காக வாதாடும் வழக்கறிஞர் ஒரு பெண்மணி என்றாலும் அவரது வாதத்திறமை நம்மை அதிர செய்கிறது. அவர் நமது சார்பில் எடுத்து வைத்துள்ள வாதங்கள் நீதிமன்றத்தில் நாற்காலியில் சாய்ந்து இருந்தவர்களை அதன் நுனியில் உட்கார்ந்து கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு அசத்தலாக இருந்தது.
உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்போது பொய்மைகள் தோற்று விடுவதுதான் இயற்கை. அதுதான் அல்லாஹ்வின் நியதியும் கூட. தீர்ப்பு சொல்லும் சிம்மாசனத்தில் அந்த இறைவன் இருந்தால் அதுதான் நிச்சயம் நடக்கும். ஆனால் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் நீதி வழங்கும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்போது அந்த மாதிரி நடப்பது ஒரு அதிசயம்தான்.
இப்போது சமீப காலங்களில் நடைபெற்ற வழக்குகளில் நீதிபதிகள் மனசாட்சியை தொட்டுப் பார்த்து நிதர்சன உண்மைகளை அலசிப் பார்த்து தீர்ப்பு வழங்கி கொண்டிருக்கும் காட்சியை பார்க்கும்போது 15ம் திகதி வரவிருக்கும் தீர்ப்பு, புற்று நோயால் பீடிக்கப் பட்டு மறைந்த ஆத்மாக்களுக்கும் அவர்களது உற்றார் உறவினர்களுக்கும் சாந்தி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த தீர்ப்பை நியாயத் தராசில் வைத்து நிறுக்கப்பட்ட தீர்ப்பாக வழங்க உறுதுணையாக இருப்பனாக.
தீர்ப்பு எதுவானாலும் அதை நாம் மனமார ஏற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கும் நீதி மன்றதையோ நீதிபதிகளையோ வாழ்த்துவது அல்லது குறை சொல்வது என்ற நிலைப் பாட்டை எடுக்காமல் நமது உணர்வுகளை ஆக்ரோஷமாக வெளிப் படுத்தாமல் அமைதி காத்து நேர் மறையான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நல்ல நேரத்தில் எனது உள்ளக் கிடக்கைகளை இங்கு பதிவு செய்கிறேன்.
ALAISALLAAHU BI AHKAMIL HAAKIMEEN.
தீர்ப்பு அளிப்போர்களிலேல்லாம் அல்லாஹ் மிக்க மேலாக தீர்ப்பு அளிப்போனாக இல்லையா? அல்லாஹ் கேட்கிறான் ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross