Re:...TIME IS THE BEST HEALER posted bymackie noohuthambi (kayalpatnam )[13 February 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43117
TIME IS THE BEST HEALER . காலம் ஒரு அருமையான மருந்து. அது எல்லா புண்களையும் ஆற்றும். சில பிரச்சினைகள் பேசப்படாமல் இருந்தாலே தீரும். சில பிரச்சினைகள் என்னதான் பேசினாலும் சமாதானம் செய்தாலும் அது செல்லுபடியாகாது. ஆனால் காலம் கடந்தபின் ஒரு சந்ததி மறைந்தபின் ஒரு வெள்ளிக் கீற்று தோன்றி அந்த பிரச்சினையை தீர்த்துவிடும்.
குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் ஏற்படும் எல்லை பிரச்சினைகள் எல்லாம் எப்படி தீர்ந்திருக்கின்றன என்பதை நாம் எல்லோரும் மூக்கில் விரல் வைத்து ரசித்திருக்கிறோம். அதிசயித்து இருக்கிறோம் சில நேரம் பிரமிப்பு சில நேரம் எரிச்சல் சில நேரம் மன உளைச்சல். எப்படி இருந்தாலும் அதை ஜீரணித்து ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறோம்.
மறதி அல்லாஹ்வின் நிஉமதுக்களில் ஒன்று என்று பெரியவர்கள் சொல்வார்கள்.ஒரு விஷயத்தை மறக்காமலே அதையே நினைத்துக் கொண்டு வாழ்பவர்கள் மன நோய்க்கு ஆளாகி விடுகிறார்கள். இரத்தக் கொதிப்பு ஏற்பட்டு திடீர் மரணத்தையும் வரவழைத்துக் கொள்கிறார்கள் என்று அறிவியல் ஆய்வின் அடிப்படையில் மருத்துவர்கள் நமக்கு புத்தி மதி சொல்வார்கள்.
ஆமா இதற்கும் அரசியல் கட்சிகள் அணி மாறுவதற்கும் என்ன சம்பந்தம் அமாவாசைக்கும் அப்துல்லாஹ்வுக்கும் என்ன சம்பந்தம்....இருக்கிறது. அம்மா ஆசைப் பட்டதால்தான் அப்துல்லாஹ் பிறந்தான் என்று அகட விகடம் புகழ் அப்துல் காதர் சொல்வார். ஆட்சி மாற்றங்கள் எப்படி நிகழும். இப்போதுள்ள ஆட்சியை மாற்றுவதற்கு அணிசேராமல் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்பதை எல்லா கட்சிகளுமே தெரிந்து வைத்திருக்கின்றன...அவ்வளவு பேர் மீதும் ஏதோ ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஏதோ ஒரு வகையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்ற விலாவாரியான தகவல் இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியாகி இருக்கிறது. தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்கை பெறுவதை தடுப்பது எப்படி என்ற கேள்விக்கு பெரும்பான்மையானவர்கள் மக்கள்தான் அதை வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்கள். மக்கள் இலவசங்களுக்கு சோரம் போய் விட்ட பிறகு, அரசியல் கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி தவிக்கும்போது, எப்படி கொள்கை ரீதியாக தேர்தலை எதிர் கொள்ள முடியும்.
எனவே கூட்டிக் கழித்து பார்த்தால், இப்படி கூட்டணிகள் சேர்வதும் பிரிவதும் ஒரு சைக்கிள் போன்று சுற்றி வந்து கொண்டே இருக்கும். தமிழ் நாடு அல்ல இந்த பாரத தேசத்தின் தலை எழுத்தே இதுதான்.
மாற்றம் வராதா...வரும் ஆனால் இளைஞர்கள் இந்த இழி நிலையை மாற்ற முற்படவேண்டும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த இளைஞர்கள்தான் விலையில்லா பொருள்கள் - இலவசங்கள் இவற்றை மக்களுக்கு வாங்கி கொடுக்க - தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய பகீரத பிரயத்தனப் பட்டு இரவு பகல் பார்க்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்...SORRY உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். .
கலைஞர் வாழ்க என்போம் அம்மா வாழ்க என்போம் காங்கிரஸ் ஒழிக என்போம். அடுத்த தேர்தலில் அதே நாவால் அப்படியே மாற்றி பேசுவோம்.
நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross