அவசரமான உலகில் எடுக்கப்படும் அபஸ்வர விதிகள். posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[17 February 2016] IP: 37.*.*.* | Comment Reference Number: 43147
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
ஒருதுளி தேனைசேகரிக்க தேனீக்கள் எவ்வளவுதூரம் பயணிக்கவேண்டும்,எத்தனை ஆபத்துக்களைசந்திக்கவேண்டும்,எத்தனைஎத்தனை மலர்கள்தாவவேண்டும் அப்படிப்பிரத்தனப்பட்டு தேடியதை மனிதனின் கண்பார்வைபட்டால் அனைத்தும் கபளீகரமாகிவிடுகிறது.
அதுபோல் நம்குழந்தைகள் 12ஆண்டுகள் பயணித்து தேடிய ஆசைகள்,நம்பிக்கைகள் பெற்றோர்கள் கைக்குச்சென்று வெற்ம்கையாகிவிடுகிறது.
பெற்றோர்களுக்கும் ஆசையிருக்கும்தான் நாம்காணாதை கனவுகண்டு குழந்தைகளின் வழியாக நிறைவேற்றவேண்டுமென்ற ஆதங்கமிருக்கும்தான், அதேசமயத்தில் ஏரோனாடிகே எல்லோரும் படித்தால் விமானத்தில் பயணிப்பதுயார்?
"இப்படியாக, வெளியிலிருந்து நமக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு நாமும் பலியாகி, பிள்ளைகளையும் பலிகிடாக்களாக்கிடத் துடிக்கிறோம்... நான் ஊட்டி வளர்த்த ப்ராய்லர் கோழி நல்ல புஷ்டியாய் இருக்கிறது என்று ஊரெல்லாம் பெருமையடிக்க எனக்கு மனசெல்லாம் ஆசைதான்... என்னுடைய ப்ராய்லர் கோழி அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே...? ஆகா... இதற்கு சரியான தீர்வு...... நாமக்கல் கோழிப்பண்ணைதான்... நமது கவலை விட்டது... கண்களைக் குருடாக்கி... காதுகளைச் செவிடாக்கி... அடித்தோ... பிடித்தோ... சக்கையாய்ப் பிழிந்து, சாறை நம்மிடம் தந்து விடுவார்கள்...! ரேஸில் ஓடும் என் பிள்ளை ஒன்று முதல் வரிசையில்தான் வர வேண்டும்... அல்லது முன் வரிசைகளிலாவது இருந்து மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்கிறோம்... ஆனால் “சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்” என்பதை வசதியாய் மறந்து விடுகிறோம்... (என்ன முழிக்கிறீங்க...? நாமதாங்க அந்த சட்டி...!!!)"
ஃபெதெர் டச் என்று மின்னணு இயந்திரங்க்களுக்கொடுக்கும் முன்னுரிமைகள் நாம் மனிதத்திற்குத்தருவதில்லை 16,17 வயது மனசுஎன்பது பெரிய அறிஞர்கள் அளவிற்குப்பார்க்கப்படவேண்டிய ஒன்றா நமக்குப்பிறந்ததுதானே நமக்கே நடக்கத்தெரியவில்லை குழந்தைகளை பறக்கவைக்கத்துடிப்பதேனோ தெரியவில்லை ?
ஒருவேளை நாம் குழந்தையாகவே மணமுடித்துவிட்டோமோ?
நிச்சயமாக இருக்காது அப்படியிருந்தாதான் நம்குசந்தைகளை நாம் புரிந்திருப்போமே. புரிந்தால் சரி
இப்ன்ஷா அல்லாஹ் இனியாவது குழந்தைகளைப்பார்த்து உனக்கு என்னபிடிக்கும்,என்னபடிக்க ஆசையென்று கேட்டு வெற்றிப்படிகளிலேற்றுவோம் ஆமீன்
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஆசிரியையவர்களே உங்களின் பார்வை சமூகத்தின்பாலும் குடும்பங்களின் பாலும் இன்ஷா அல்லாஹ் வெகுவாக ஈர்க்கப்படுவீர்கள் ஆமீன்.தொடரட்டும்
.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross