Re:...பெண்களின் ஆளுமை திறன்... posted bymackie noohuthambi (kayalpatnam )[22 February 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43207
அம்மா அவர்களின் அறிவிப்பால் பெண்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் உண்மை நிலை நிதர்சன உண்மைகள், கடந்த காலங்களில் பெண்கள் ஆட்சி நடந்த நாடுகள் , அவர்கள் அரசோச்சிய முறைகள் எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்த்தால் ஏமாற்றங்களே விஞ்சி நிற்கின்றன .
இஸ்லாம் பெண்களுக்கு சிறப்பான இடத்தை கொடுத்திருந்தாலும் சுமார் 1,25,000 நபிமார்கள் அல்லது திருமறையில் பெயர் குறிப்பிடப் பட்டுள்ள நபிமார்கள் யாருமே பெண்களாக இருந்ததில்லை . பெண்களைப் பற்றி இறைவன் சொல்லும்போது கூட
''ARRIJAALU QAWWAAMOONA ALAN NISAAYI BIMAA FALLALALLAAHU BAULAHUM ALAA BAULIN VA BIMAA ANFAQOO MIN AMVAALIHIM ...''
என்று அந்த வசனம் நீண்டதொரு செய்தியை மனித இனத்துக்கு சொல்கிறது.
ஆண்கள் தொடர் வண்டியை போன்றவர்கள் என்று வைத்துக் கொண்டால் அந்த தொடர்வண்டி போய் சேரவேண்டிய இடத்தை பாதுகாப்பாக போய் சேரவேண்டுமானால் அது ஓடும் தண்டவாளங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். ரயில் தடம் புரண்டால் தண்டவாளத்தில் இருந்து விலகி சென்றால் அல்லது தண்டவாளத்தில் விரிசல்கள் இருந்தால் அந்த ரயில்கள் விபத்துக்களை சந்திப்பதை கண்கூடாக கண்டுவருகிறோம். எனவே ரயில் ஓடுவதற்கு தண்டவாளங்கள் எவ்வளவு இன்றி அமையாதவை என்பது தெளிவாகிறது. ஆனால் ரயில் இப்படி வேகமாக ஓடுகிறதே, நம் மீதுதானே அது சவாரி செய்கிறது என்று தண்டவாளங்கள் நினைத்து நாமும் அதே போல் ஓடுவோம் என்று முடிவெடுத்து தண்டவாளங்கள் ஓட ஆரம்பித்தால் ரயில் ஓடுவதும் தண்டவாளம் ஓடுவதும் இயற்கைக்கு மாற்றமாக அமைந்து விடும்.
எனவே தண்டவாளம் அதன் கடமையை செய்ய வேண்டும் ரயில் அதன் கடமையை செய்ய வேண்டும். இயற்கையிலேயே ஆண்களுக்கு சில உடல் அமைப்புக்களையும் பெண்களுக்கு சில விசேட உடல் அமைப்புக்களையும் இறைவன் வழங்கியுள்ளான். இவற்றை இறை பக்தி உள்ளவர்கள் மட்டுமே சிந்தித்து செயலாற்ற முடியும். குறிப்பாக அல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகம் அவர்களின் வழிமுறை இவற்றை ஓதி உணர்ந்தவர்கள் மட்டுமே இதை சிந்தனைக்கு எடுத்துக் கொள்வார்கள்.
மற்றப்படி இந்திரா காந்தி, கோல்டா மெயர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே போன்றவர்கள் ஆண்ட முறைகள், நமது தமிழக முதல்வர் ஆளும் முறைகள் எல்லாமே நமக்கு கண்முன்னால் தெரிகிறது. உரிமைக்கு குரல் கொடுக்கும் பெண்கள் தங்கள் கடமைகளும் என்ன வென்று அறிந்து வைத்திருந்தால் நல்லது.
இஸ்லாம் பெண்களுக்கு சில ஆளுமை திறன்களை கொடுத்துள்ளது. ஆண்களுக்கும் சில ஆளுமை திறன்களை கொடுத்துள்ளது. இவற்றை உணர்ந்து செயல்பட்டால் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 50 விழுக்காடு ஒதுக்கீடு நாட்டு மக்களுக்கு பயன்தரும்.
இல்லாவிட்டால்....
''தம்பி உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?'' என்று கேட்பதுபோல் இந்த தமிழ்நாடும் அமைந்து விடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross