Re:...முதுமையிலும் இளமை posted bymackie noohuthambi (kayalpatnam )[01 March 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43262
மர்ஹூம் முஹம்மது அலி காக்கா அவர்களை முன்மாதிரியாக கொண்டு உழைப்பவர்கள் வெற்றி பெறமுடியும். அவர்கள் தொட்ட துறைகளில் எல்லாம் அல்லாஹ் உதவியால் வெற்றி பெற்று அவர்கள் மக்களையும் அந்த பாதையில் இட்டு சென்றிருக்கிறார்கள்.
முதலில் அவர்கள் தோற்றம். வெள்ளை உடை, தொப்பி. அங்கவஸ்திரம் யாவுமே வெள்ளை வெளேர். அடுத்து அவர்கள் தொழுகை இபாததுக்கள். அடுத்து அவர்கள் பொது நல சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. அடுத்து நேரம் தவறாமை, எல்லாவற்றுக்கும் மேலாக முதுமையிலும் இளமை தோற்றம். துடிப்பு, வேகம் விவேகம். பேச்சிலே மென்மை தொழிலிலே நேர்மை, பொது வாழ்வில் தூய்மை இப்படி பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம். நோயில் படுத்த காலங்கள் கூட நினைவில் இல்லை.
சகோதரர் கல்கத்தா சுல்தான் அவர்கள் என்னைக் காணும்போதெல்லாம் அவர்களது வாப்பாவுடன் எனக்கிருந்த சில தொடர்புகளை அந்த நாட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
என்னதான் வயதானாலும் தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கி உயர்ந்த நிலையில் வாழச்செய்த தந்தை மறைவை நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனாலும் ஆல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் கட்டுப்பட்டு அதைப் பொருந்திக் கொண்டு அவர்களுக்காக துஆ செய்வதே அவர்கள் சொர்க்க வாழ்வுக்கு வழி வகுக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்கள் குற்றம் குறைகளை பொறுத்துக் கொள்வானாக. அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.
அவர்கள் விட்டு சென்ற நல்ல பணிகளை அவர்கள் சந்ததிகள் முன்னெடுத்து செல்வதற்கு நல்லருள் புரிவானாக.
ஒரு குடும்ப தலைவரை இழந்து நிற்கும் எல்லா குடும்ப உறுப்பினர்களுக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross