துடிப்பான பெரியவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[02 March 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43290
மாமா அவர்களை அடிக்கடி பார்த்துப் பழகிய யாருக்கும் அவர்களை ஒரு முதியவராகக் கருதவே இயலாது. காரணம் - வயதாலும், தோற்றத்தாலும் தன் மேல் படிந்த முதியவர் அடையாளத்தை, தன் வலுவும் - வீரியமும் மிக்க துடிப்பான செயல்பாடுகளால் மாற்றி வாழ்ந்து காட்டியவர் மாமா அவர்கள்.
நல்ல காரியங்கள் எதுவானாலும் தன்னாலியன்ற பங்களிப்பை இன்முகத்தோடு தாமாக முன்வந்து தந்து மகிழ்பவர்... அவ்வாறு நடக்கும் நிகழ்ச்சிகளைத் தன் நிகழ்ச்சியாகக் கருதி, எப்படியேனும் நிகழ்விடம் வந்து சிறப்பித்துச் செல்வதை வழமையாகக் கொண்டவர்கள்...
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் அன்பு இளைய மகனும் - எனதினிய நண்பனுமான மவ்லானா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross