Re:...நினைவாற்றலுக்காக து ஆ செய்கிறோம் posted bymackie noohuthambi (colombo)[04 March 2016] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43305
நபிகள் நாயகம் அவர்களிடம் ஒரு தோழர் வந்து எனக்கு எதை ஓதினாலும் அது மனதில் நிர்கமாட்டேனின்கிறது. எனக்காக து ஆ செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டார்கள். நபிகள் நாயகம் அவர்கள் ஒரு து ஆவை ஓதி அவரது மேலங்கியை நீட்ட சொன்னார்கள் அதில் அவர்கள் ஓதியதை ஊதினார்கள். அன்றிலிருந்து அந்த நபி தோழர் அவர்கள் எதையும் மறந்ததில்லை என்ற ஒரு செய்தியை உலமாக்கள் சொல்லி காட்டுவார்கள்.
நம் எவ்வளவுதான் முயன்று படித்தாலும் பரீட்சைக்கு தயார் செய்தாலும் நாம் எதிர்பார்த்த கேள்விகளே வினாத்தாளில் இருந்தாலும் நமக்கு அதற்கு சரியான விடை தெரிந்திருந்தும் நம்மால் எழுத முடியாமல் நமது நினைவாற்றல் குறைவு தடுத்து விடுகிறது. எனவே மாணவ மாணவிகள் நினைவாற்றலுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். தஹஜ்ஜத் வேளைகளில் எழுந்து தொழுதுவிட்டு படியுங்கள். இரவு நேரம் அதிகம் கண்விழித்து படிக்க வேண்டாம். வைகறை வேளையில்தான் நமது மூளை 90 விழுக்காடு வேலை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் வல்ல அல்லாஹ் பரீட்சைக்கு செல்லும் எல்லோருக்கும் இறை பக்தியையும் தன் நம்பிக்கையையும் தருவானாக. வானொலி,தொலைக் காட்சி waatsup இவைகளுக்கு விடை கொடுங்கள் வெற்றி வாகை சூடுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக தேர்வு என்பது ஒரு திருப்பு முனையே தவிர அதுவேதான் வாழ்க்கையின் விடிவு முடிவு என்று யாரும் எண்ணி விடாதீர்கள்.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை. வாழ்த்துக்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross