Re:...அங்கீகாரம் பாராட்டு posted bymackie noohuthambi (colombo)[20 March 2016] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43371
மிக அருமையான கருத்தோவியம்.
நான் எழுதுவது கடிதம் அல்ல உள்ளம்...
அதில் இருப்பதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்...
உன் உள்ளமதை கொள்ளை கொள்ள...
என்று ஒரு கவிஞன் பாடுவான்.
உம்மு நுமைரா அவர்களின் ஒரு கட்டுரையை படித்து நமதூர் பெண்களுக்கு இப்படி எழுத வராதே என்று நான் சந்தேகப்பட்டபோது நெற்றியில் அடித்ததுபோல் ஒருவர் சொன்னார், என்ன இவர்களை தெரியாதா, உங்கள் வாப்பாவின் நண்பர் கலாமி காக்காவின் மருமகள் என்றார்... கலாமி காக்கா எனது வாப்பாவுக்கு மட்டுமா நண்பர் எனக்கும்தான் என்றேன். அப்போ உனக்கு வயசு என்ன என்று கேட்டார்....உஷ் .... அந்த subject க்குள் போகாதீர்கள்......
அகவை 92 தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி காலை 4.30க்கு அறிவாலயம் செல்கிறார், தினசரி நடை பயிற்சி செய்கிறார், உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுகிறார், சாதாரண தொண்டன் ஒருவன் எழுதும் கடிதத்தையும் படிக்கிறார், எல்லா தினசரிகளையும் நாளிதழ்களையும் ஒன்று விடாமல் படிக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உள்ள செய்தியையும் அட்சரம் பிசகாமல் சொல்கிறார், இதோ தேர்தலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு பாட்டும் நானே பாவமும் நானே என்று திமுகவின் முதலைமச்சர் வேட்பாளராக களம் இறங்கி கலக்குகிறார்... இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது. நமக்கு 50 வயது ஆனவுடனேயே அப்பப்பா எனக்கு வயதாகி விட்டது, இனி வீடும் பள்ளியுமாக இருக்க வேண்டியதுதான் என்று ஆயாசப்பட்டுக் கொள்கிறோம்.
16 வயது பருவம் அடைந்ததிலிருந்து மண்ணறை செல்லும் வரை அன்றாடம் பள்ளிவாசல் மீது ஒரு கண்ணாகவும் வீட்டின் மேல் இன்னொரு கண்ணாகவும் இருக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையல்லவா..
என்ன வளவளா கொள கொளா என்று எழுதுகிறான் என்று யோசிக்காதீர்கள்.
சகோதரி சொல்லும் அங்கீகாரம் பாராட்டு எல்லாம் இருந்ததால்தான் இவர்கள் சாதிக்கிறார்கள். மனசுக்கு வயசில்லை.
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் நிலை ஆகலாம்
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?
சகோதரி எடுத்து வைத்துள்ள கருத்துக்கள் நூறு சதவீதம் சரியானது அதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது.
கணவன் மனைவி மகள் மகன் பேரன் பேத்தி உம்மா வாப்பா சகோதரன் சகோதரி எல்லோருமே அவரவர் மனநிலைக்கு ஏற்றபடி இந்த அங்கீகாரத்தை பாராட்டை எதிர்பார்க்கிறார்கள் என்பதை குடும்பத்துடன் வாழ்பவர்கள் நன்கு உணர்வார்கள் நானும் அணுவணுவாக அனுபவித்து இருக்கிறேன்.
''எங்க மாப்பிள்ளை எதை வச்சாலும் திண்டுட்டு போய்விடுவோ'' என்று ஒரு மனைவி சொன்னால் மாப்பிள்ளை ஒழுங்கா செலவுக்கு கொடுக்க மாட்டார் என்று அர்த்தம். சமையலை பாராட்டவும் வேண்டும் அதிலுள்ள குறைகளை சொல்லவும் வேண்டும் இரண்டையுமே மனைவி கணவனிடமிருந்து எதிர்பார்க்கிறாள்.
உணவிலே அவளது தலைமுடி இருப்பதை பார்த்து அவள் திடுக்கிடும்போதும் நாம் அவளை பாராட்ட வேண்டும். '' உன் முடி அது உன் தலையில் இருந்தாலும் அழகாகத்தான் இருக்கிறது எனது இலையில் இருந்தாலும் அழகாகத்தான் இருக்கிறது''
இப்படி romantic கட்டுரைகள் ஆண்களுக்கு நிறையவே பிடிக்கும். இன்னும் எழுதுங்கள் உங்கள் கட்டுரைகளை ரசிக்கின்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களை மானசீகமாக வாழ்த்துபவர்கள் உங்களுக்காக துஆ செய்பவர்கள். உங்களை போல் என் பிள்ளைகளும் வரவேண்டும் வளர வேண்டும் வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்பவர் நிறைய பேர் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross