அரசியல் தற்கொலை! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[23 March 2016] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 43389
மக்கள் நல கூட்டணியோடு தே.மு.தி.க இணைந்து விட்ட செய்தியறிந்தேன்! இந்த கூட்டணி மக்கள் முன் வந்து அதற்கு மக்கள் ஆதரவு பெற்று பின்னர் வெற்றிபெற்று விஜயகாந்த் முதல்வராக வருவாரேயானால்,அவருக்கு வாழ்த்து தெரிவித்வனாக நல்லாட்சி வழங்கிட வேண்டுகிறேன்!
ஒரு தேர்தல் என்றால் அதில் சாதகத்தையும்,பாதகத்தையும் அலசி பார்ப்பத்துதான் அறிவுடைமை!அவசரத்திலும், உணர்ச்சியிலும் ஒய்யாரத்தில் இருக்கும் பதவியாசையாலும் பதட்டத்துடன் எடுக்கும் முடிவானது சில நேரங்களில் மிகப்பெரிய ஒரு படுகுழி பாதாளத்தில் தள்ளிவிடக்கூடிய துர்பாக்கிய நிலையாகக்கூட மாறலாம்!
தே.மு.தி க வை பொருத்தவரை ஒரு ஜென்ம விரோதி யார் என்றால் அது அ.தி மு க தான்.அது எப்படியும் அறியணையில் ஏறக்கூடாது என்பதுதான் இவரின் இலட்சியம்.அதே நேரத்தில்,
இப்போதுள்ள கூட்டணியால் யாருக்கு இலாபம் என்றால் அவருடைய முதன்மை எதிரிக்குத்தான் மிகப்பெரிய இலாபம்.பேரானந்தமும் பட்டாசும் வெடிக்க கூடியவர்கள் உண்மையில் அ.தி மு.க வாகத்தான் இருக்க வேண்டும்!
ஒன்று மட்டும் நிச்சியம் ஒருவேளை யாருக்கும் தனி பெரும்பான்மை அமையவில்லை என்றால்,ஆட்சி அமைக்க ஒரு சில சீட்டுகள் மட்டுமே அ தி மு க விற்கு தேவை என்றால்,
முதன் முதலில் உங்களை கழற்றிவிட்டி ஓடுவது வைகோ அவர்கள்தான் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ளுங்கள்!அவருடைய அரசியல் துரோக வாழக்கை வரலாறு,சரித்திர சான்றாக அமைந்த்ததால்
அதை உதாரணப்படுத்துகிறேன்!
உங்களை விட்டு ஓடிய உங்கள் முன்னாள் எம் எல் ஏ க்களை யும் சற்று சிந்தித்து பாருங்கள்.உங்களுக்கு வலுவான ஒரு வெற்றி கிடைக்க வில்லை என்றால் உங்கள் கட்சியின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக மாறிவிடக்கூட
வாய்ப்புகள் அதிகம்!
எனக்கென்னாமோ உங்களின் முடிவு அரசியல் சாதுர்யமல்ல அரசியல் தற்கொலைமாதிரி தெரிகிறது.
அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross