இடையூறாக செப்பனிடப்படாமல் இருக்கும் சாலைகள்,தெருக்கள் இருப்பது ஒருபுறம்
பக்கம்பக்கமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது மறுபுறம் நகராட்சி என்றபெயரில் நரக ஆட்சி.
மீசை அரும்பும்முன் மக்களுக்கு மோட்டோர் இருசக்கரவாகனங்கள் பெருமைக்காகவும் கௌரவத்திற்காகவும் கொடுக்கப்பட்டு உயிரின்விலையும் கண்ணியமும் அறியாமையில் அழிந்துவருகிறது 10,12 வயது மைனர்களுக்கெல்லாம் இப்படி வாகனக்களைவாங்கிக்கொடுத்து கெடுத்துவருகிறார்கள் அவர்களுக்கு அந்தவயதில் வேகம்மட்டுமே தலைகாட்டும் விவேகம் எடுபடாது என்பதைமறந்து நாளுக்குநாள் அதிகரித்துவரும் விபத்து இழப்பு உயிர்சேதங்கள் எல்லாம் தெரிந்தும் பெற்றோர்கள் வழிகெடுக்கிறார்கள்.
இந்தவிஷயங்களை உரியவர்களிடம் சொன்னால் பொறாமையில் பேசுகிறான் வயிற்றெரிச்சலில் பேசுகிறான் என்று முடிவுசெய்துவிடுகிறார்கள் ஆனால் இவர்களால் இதனால் வரும் இழப்பை இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஒருபாதிக்கப்பட்டவனின் குடும்பத்தின் நிலைகண்டால்தான் புரியும் அஸ்தஃஃபிருல்லாஹுல்அழீம் இன்னும் அவர்களுக்கும் இழப்புவரும்போதுதான் புரிகிறது.
ஏ எல் எஸ் மாமா பலபடி மேலேபோய் இன்னுமொரு கோணத்தில் போக்குவரத்து இடையூறு அதனால் நாம் இழக்கும் பயன்கள் அதாவது பேருந்துகள் நமதூருக்குள் வராமலே சென்றுவிடுகிறது உங்களுக்கென்ன உங்களிடம் வாகனங்களிருக்கிறன நினைத்த நேரத்தில் சென்று காரியத்தைசாதித்துவிடலாம் பாமரன் வழியற்றவன் என்னசெய்வான்?
இந்த வாழ்க்கை சொற்பமண்வாசம் அதன்பிறகு மண்ணறையின்வசமே
இதையாருக்கும் வேதனைகொடுப்பதற்காக பதியவில்லை ஆனால் வேதனையோடு எழுதுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross