உள்ளத்தில் ஏற்படும் இறுக்கங்களே இல்லத்தின், இல்லறத்தின் விரிசல்களுக்கு வித்திடுகிறது நலமாக இருக்கும் உடலில் மன இறுக்கங்களே எல்லா நோய்களையும் ஏற்படுத்துகிறது இதயச்சுவர்கள் இடியும்போதே இதழ்களும் புன்னகைளும் உலர்ந்துபோகின்றன.
இந்நிலை பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும், பெண்களையே அதிகம் தாக்குகிறது ஓய்வற்றவேலைப்பளு ஆத்திரமூட்டும் வகையில் சித்தரிக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களும் ஒருவருகொருவர் விட்டுக்கொடுத்துப்போகாததும் நேர்மறை நோக்கங்களுமில்லாமையுமே.
ஒருமலர்த்தோட்டத்தில் பலவகை மலர் செடி,கொடி,மரங்களிருக்கும் ஒவ்வொருமலருக்கும் தனித்தனி மனமும்,குணமும் இருக்கும் இருந்தபோதிலும் எல்லாமலரிலும் தேனின்சுவைமட்டும் தித்திப்பாகவே இருக்கும் காரணம் அவைகளுக்குள் பொறாமைபோட்டியில்லை காற்றோடு ஆடும்போது ஒன்றோடொன்று உரசும்போதும் எந்தமலரும் எந்தமலரையும் காயப்படுத்துவதில்லை, கோபம் கொள்வதில்லை மாறாக மகரந்தபரிவர்த்தனை நன்றாகவே நிகழ்கின்றன.
அதாவது இறவன் அவரவரை அந்தந்த இடத்தில்தான்வைத்திருக்கிறான் ஆனாலும் எல்லாவர்மீதும் அனபிமட்டும் ஒரேமாதிரிதான்வைத்திருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் நிச்சயமாக அதில்மாற்றங்களில்லை அவன் பெரும்கருணையாளன் நாம் அடையும் அந்தஸ்துகள் அவனை அணுகும்முறையிலேயேஉள்ளது,
நாம் நினைத்தால் அவர்களுக்கு தங்க்கத்தில்கூட இருப்பிடங்கள் அமைத்துக்கொடுப்போம் அவர்களும்தான் சற்றுசுகிக்கட்டுமே இது அனைவருக்கும்பொருந்தும் அதுஇம்மையோடு முடியும் மறுமையில் நிச்சயமாக பொறுமையுடையோருக்கே மாபெரும் வெற்றி காத்திருக்கிறது.
இதுபோன்ற மன இறுக்கங்களுக்குத்தள்ளப்பட்ட இருபாலர்களுக்கும் ஓய்வும் ஆலோசனைகளும் நல்லபயன்தரும் நமது ஊரைப்பொருத்தவரையில் ஆண்களாகிய நாம் பறந்துசென்று போருதேடுவதற்காக வந்துகிறோம் ஆண்டுகள்கடந்துகொண்டேபோகின்றன இளமை இழப்புகளல்லாமல் உறவுப் பரிவர்த்தனைப் பிரிவுகள் இதுவும்பெரும்பாலும் மன இருக்கங்களுக்குக்காரணம் பொருள்தேவைதான் நீண்ட பிரிவு தேடும்பொருள் பொருளற்றதாகிவிடும் அதிகபட்சம்
குடும்பமென்பது ஒருஅழகியகலவை அதில் அனைவருக்கும் பங்கு உண்டு நான் சொத்து சுகங்களைச்சொல்லவில்லை சுகமாக வாழ்வதற்கு நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய பங்குகளேஅது மணம்முடித்ததுமுதல் மனைவியென்பவள் இல்லறத்திலிருந்து பள்ளியறை,அடுப்பறைவரை பிள்ளைகளைக்குடம் அனுப்பியபிறக்கும் எல்லாம் அவள்பொறுப்புதானென்று நாம்விலகிக்கொண்டால் அவர்களுக்கும் வெறுப்புதானேவரும் மனிதம்பெற்ற,பெற்றுத்தரும்ஜீவனல்லவா வெறும் ஒருபோகப்பொருளோ,இயந்திரமோ அல்லவே அவர்களோடு காரியகார்யங்களில் ஒத்தாசையாக இருந்து அந்தந்தவேலைகளில் நாமும் பங்குகொண்டு செயல்பட்டால்தானே விரைவில் வேலையும்முடியும் உடல் ஆரோக்கியமும்கிடைக்கும் ஒய்வும்கிடைக்கும் தூக்கமில்லையென்ற பேச்சுக்கே இடம்வராது.
நிம்மதியான தூக்கமே பெரும்பாலான நோயான இரத்த அழுத்தங்களையும் மனஅழுத்தங்களையும் போக்கிவிடும்.
வேலைகள்முடிந்தவுடன் உணவுக்குப்பின் இரவில் பிரார்த்தனைகளோடு படுக்கைக்குச்சென்றுவிடுங்கள் அதன்பிறகு தொலைக்காட்சிப்பக்கம் தலைவைக்காதீர்கள் இன்ஷா அல்லாஹ் அழகிய கனவுகளோடு புதியபொழுதுபுலரும் ஆமீன்.
இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகமதிகம் கலந்து மக்கள்பயன்படுத்தி நலடையவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross