ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் ஒத்துழைப்புடன், காயல்பட்டினம் மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் சார்பில், “மனதோடு பேசலாம் வாங்க!” எனும் தலைப்பில், மகளிருக்கான மனநல ஆலோசனை முகாம், இம்மாதம் 19, 20 ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த - Educational Psycologist & Marital Counselor டாக்டர் குர்ஷித் பேகம், இம்முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “பிரச்சினைகளைக் கையாள்வதெப்படி?” எனும் தலைப்பில் சுமார் 1 மணி நேரம் உரை நிகழ்த்தியதோடு, பங்கேற்றோரின் உளவியல் தொடர்பான கேள்விகளுக்கும் விடையளித்தார்.
இம்முகாமில், முஸ்லிம் - முஸ்லிமல்லாதோர் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற தனிநபர் ஆலோசனை நேரத்தின்போது, சுமார் 30 பெண்கள் சிறப்பு ஆலோசனைகளைப் பெற்றனர்.
இம்முகாம் தமக்கு மிகுந்த பயனளித்ததாக, பங்கேற்ற பெண்கள் ஏற்பாட்டாளர்களிடம் கூறினர். மகளிருக்கு நிறைய ஆர்வமுள்ளதாகவும், மனநலம் தொடர்பான தேவைகள் அவர்களுக்கு அதிகளவில் உள்ளதை தனிநபர் சிறப்பு ஆலோசனை மூலம் அறிந்துகொண்டதாகவும், பிறிதொரு நாளில் மீண்டும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யுமாறும், முகாம் நடத்துநர் டாக்டர் குர்ஷித் பேகம் கேட்டுக்கொண்டார்.
நிறைவில், மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தில் பயிலும் சிறுமியருடனும் அவர் கலந்துரையாடிச் சென்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்ற நிர்வாகிகளும், அங்கத்தினரும் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
MOFAMALIK
மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|