காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
மார்ச் 22, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 64]
வியாழன், மார்ச் 22, 2001
கே.எம்.டியில் பெண் தீக்குளிப்பு - ஊரில் பரபரப்பு!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் கே.எம்.டி.மருத்துவமனையில் 5 மாதங்களாக பணிபுரியும் ஆத்தூர் சேர்ந்தமங்கலத்தைச் சேர்ந்த பொன்செல்வி (19) என்ற பெண் தனது குடும்பத்தகராரில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனது அறையில் 21-03-2001 அன்று மாலை 7:00 மணியளவில் தன் உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து மரணமடைந்துள்ளார்.
இதனால் காயல்பட்டணம் மங்களாவாடியை சேர்ந்தவர்கள் இதை பிரச்சனையாக்கி பிரேதத்தை காயல்பட்டணம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யக்கூடாது என்றும் திருச்செந்தூர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து பரிசோதனை ரிப்போட்டில் தற்கொலைதான் என்று ஊர்ஜிதபடுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பிரேதத்தை பெற்றோர்களும், சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வாங்க மறுக்கிறார்கள். இதனால் ஊரில் சுமூகமான சூழ்நிலை இல்லை. இன்று காலையில் இருந்து பஸ்கள் ஓடவில்லை, பள்ளிக்கூடம் இயங்கவில்லை. இது விஷயமாக மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பி, காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் முகாமிட்டு சூழ்நிலையை சரிசெய்து கொண்டுள்ளார்கள். இச்சம்பவத்தை காவல்துறையில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை, தாசில்தார், ஆர்.டீ.ஓ, எஸ்.பி ஆகியோரிடம் தகராறு செய்து பிரச்சனையை ஏற்படுத்திய மங்களாவடியை சேர்ந்த சில நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு மனு கொடுத்து ஊரில் வழமையான சூழ்நிலை ஏற்பட உடனடி நடவடிக்கை எடுக்குமாறு த.மு.மு.க.கேட்டு கொண்டுள்ளது.
இச்சம்பவத்தினால் காயல்பட்டணம் முஸ்லிம்கள் பொறுமை காத்து காவல்துறையோடு ஒத்துழைத்து நமது ஊரின் கண்ணியத்தை காப்பாற்றினார்கள். இது விஷயமாக ஊர் கமிட்டியை கூட்டி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஊர்மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இது விஷயமாக வெளிநாட்டில் வாழும் காயல் சகோதரர்கள் ஊர் நலன் கருதி உங்கள் ஆலோசனைகளை அனுப்பி வைக்கவும். உங்கள் ஆலோசனைகளை காயல்பட்டணம் சமரச அமைப்பு, 16,நெய்னார்தெரு என்ற முகவரிக்கோ அல்லது மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமியின் இமெயில் முகவரிக்கோ அனுப்பவும்.
|