கேரள மாநிலம் - மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், மன்றத்திற்கான ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் புதிய செய்தி தொடர்பாளர் எஸ்.என்.மீரான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் எமது அமைப்பின் மூன்றாவது பருவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழுவின் முதல் கூட்டம் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமையன்று 10.30 மணிக்கு அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
மன்றத் தலைவர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ், கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 உறுப்பினர்களில் முதன் முறையாக செயற்குழுவில் இடம்பெற்றுள்ள 6 உறுப்பினர்களுக்கு, கடந்த பருவத்திலும் செயற்குழுவில் செயலாற்றியவர்களால் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மன்ற செயற்குழுவின் நடைமுறைகள் பற்றி, செயலாளர் என்.எம்.அப்துல் காதிர் விளக்கினார்.
மருத்துவ உதவிக்காக ஷிஃபா அறக்கட்டளை மூலம் பரிந்துரைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து ஆறு கடிதங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அதற்குரிய தொகை 19,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.
MKWAவின் நற்செயல் மென்மேலும் செழித்தோங்க இந்த பருவத்தில் நம் மன்றத்தின் செயல்பாடுகளில் ஆலோசனைகள் வழங்குவதற்காக,
1. ஜனாப் எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் (அமீன் டூல்ஸ்_ கோழிக்கோடு)
2. ஜனாப் எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.)
3. ஜனாப் எச்.எல்.ஜாஃபர் சாதிக் (வெல்கம் டூல்ஸ்_ தலச்சேரி)
ஆகியோர் மன்ற ஆலோசகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடப்பு பருவத்திற்கான - மன்றத்தின் செய்தி தொடர்பாளராக புதிய செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.மீரான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பருவத்தின் முதல் பொதுக்குழு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 27:03:2016 ஞாயிறு அன்று அஸருக்கு பிறகு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!
கடந்த பருவத்தின் மக்வா செயல்பாடு பற்றி சில கேள்விகளை உறுப்பினர் ஒருவர் கடிதம் மூலம் நடப்பு செயற்குழுவிடம் கேட்டிருந்தார். எந்தக் கேள்வியாக இருந்தாலும் பொதுக்குழுவின்போது கேட்குமாறும், அதுவே சிறந்த அனுகுமுறை என்றும் அவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
அனைவரின் துஆவுடன், 14.30 மணியளவில் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்வாவின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|