பொன்னன்குறிச்சியிலிருந்து, காயல்பட்டினத்திற்கு தனியாகக் குடிநீர் வினியோகிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இரண்டாவது பைப்லைன் திட்டம் அறிவிக்கப்பட்டு, கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொன்னன்குறிச்சியிலிருந்து காயல்பட்டினம் வரையிலான வழித்தடத்தில், பிரதான குழாய் பதிக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெருக்களில் குழாய்கள் பதிக்கும் பணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறது. காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெரு, தீவுத்தெரு ஆகிய தெருக்களில் நேற்றும், இன்றும் (மார்ச் 22, 23) வினியோகக் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாவது பைப்லைன் திட்டம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|