ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், வரும் ரமழான் மாதத்தில் - காயல்பட்டினம் நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வரும் ரமழான் மாதத்தில் அடுத்த பொதுக்குழு நடைபெறப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 39 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 18-03-2016 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் இணைப்பொருளாளர் எம்.ஓ. அன்ஸாரீ அவர்களின் தலைமையில் பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மது மற்றும் பொருளாளர் பீ.எம். ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் வைத்து கூடியது.
துபை காயல் நலமன்ற உறுப்பினர் முத்து முஹம்மத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
பங்கேற்றோரின் விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
சென்ற ஆண்டு போல இவ்வாண்டும் அபூதபீ காயல் நல மன்றதத்தின் சார்பில் நலத்திட்டங்களுக்கு குறிப்பாக கல்வி, மருத்துவம், இமாம்-பிலால் ஊக்கத்தொகை, ரமழான் மாத உணவுப்பொருள் வழங்குதல், ஆகியவற்றுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டு செயற் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது
ரமழானில் அடுத்த பொதுக்குழு கூட்டம்:
மன்றத்தின் அடுத்த (8ஆவது) பொதுக்குழு கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் புனித ரமழான் மாதம், ஜூன் 16 ஆம் திகதி இப்தாருடன் வெகு சிறப்பாகக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு நிகழ்விடம், மற்றும் பொதுக்குழு இதர காரியங்களை சிறப்பாக்கி தர கடந்தாண்டைப் போல இவ்வாண்டும் ஹாஜி I. இம்தியாஸ் அஹ்மத், S.A.C. ஹமீத், V.S.T. ஷேக்னா லெப்பை ஆகியோர் மற்றும், சந்தா தொகை வசூலிக்க இணைப் பொருளாளர்கள்: நோனா அபூஹுரைரா (0561092766 ] M.O. அன்ஸாரீ(0559100909), மக்கள் தொடர்பு செயலர்: A.R..ரிஃபாய் [0554203056] மற்றும் இஸ்மாயில் [0502933778] ஆகியோர்கள் செயல்படுவார்கள். மேலும் இடம் முடிவான பிறகு தனி அழைப்பு செய்தியாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.
பொதுக்குழு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனைத்து உறுபினர்களுக்கும் மின்னஞ்சல் / குறுஞ்செய்தி (Email/SMS) வாட்சப் (WhatsApp), இணையதளங்களில் மூலம் தகவல் தெரிவித்து உறுப்பினர்களை ஒன்றிணைக்க இணைச் செயலாளர் கே. ஹுபைப் [0508490978], டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் [0509450404] ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மருத்துவ உதவிக்காக மொத்தம் 25,000/=
மருத்துவ உதவிக்காக ஷிஃபா அறக்கட்டளை மூலம் பரிந்துரைக்கப்பட்ட நான்கு நபர்களுக்கான கடிதங்களை மன்ற ஷிஃபா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் விவரிக்க பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அதற்குரிய தொகை தலா மூன்று பேருக்கு ஐந்தாயிரமும், ஒருவருக்கு பத்தாயிரமும் ஆக மொத்தம் 25,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இமாம்-பிலால் ஊக்கத்தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வாவின்) முன்முயற்சியில் செய்யப்படும் - இமாம் பிலால் ரமழான் நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்தாண்டைப் போல இவ்வாண்டும் இணைந்து செயல்படவும், அவ்வகைக்காக நிதியை வழங்குவதற்கு மன்றத்தலைவர் V.S.T. ஷேக்னா லெப்பை மற்றும் பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மது ஆகியோர்களை மன்ற உறுப்பினர்கள் தொடர்புகொண்டு தத்தம் நிதியை ஜகாத் மற்றும் ஸதக்கா வகையில் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்ட உதவி:
கடந்த ஆண்டைப் போன்று சிறப்புற செயல்படுத்தி வரும் ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்டத்தை இவ்வருடமும் இன்ஷா அல்லாஹ் மன்றத்தின் சார்பாக 20 நபர்களுக்கும், தனித்தனி அனுசரணை மூலம் கூடுதலாக இவ்வருடமும் இன்ஷா அல்லஹ் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டு, மேலும் இதற்காக உணவுப்பொருள் வழங்க நாடுவோர் உடனடியாக மன்றத்தலைவர் V.S.T.ஷேக்னா லெப்பை, பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மது மற்றும் இணைப் பொருளாளர் நோனா அபூஹுரைரா [ 056 109 27 66 ] ஆகியோர்களை தொடர்புகொண்டு ரமழான் நெருங்கிவிட்டதை கருத்தில்கொண்டு பயனீட்டாளர்களின் முகவரியை, துரிதமாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இறுதியாக மவ்லவீ ஹாஃபிழ் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|