மருத்துவ கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசு, 1975ஆம் ஆண்டு - NATIONAL BOARD OF EXAMINATIONS (NBE) என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு நடத்தும் DIPLOMATE OF NATIONAL BOARD - CENTRALISED ENTRANCE TEST (DNB-CET) என்ற தேர்வு மூலம் - நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில், பட்டபடிப்புக்கு மேலான உயர்கல்வியைத் (POST-GRADUATION) தொடர, மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் இரு முறை, இரு பருவங்களுக்கு (ஜனவரி, ஜூலை) என இந்த அமைப்பு, இத்தேர்வுகளை நடத்துகிறது.
ஜனவரி 2016 பருவத்திற்கான தேர்வுகள் நவம்பர் 28, 2015 - டிசம்பர் 01, 2015 காலகட்டத்தில் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் சுமார் 50,000 மாணவர்கள் பங்கேற்கும், 300 மதிப்புகளுக்கான இத்தேர்வுகளின் முடிவில், தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
அதன்படி ஜனவரி 2016 பருவத்திற்கான தேர்வுகளை எழுதிய - காயல்பட்டினத்தைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மத் இப்றாஹீமின் மகன்வழிப் பேரனும், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த தாஹா ஹாஜியின் மகள்வழிப் பேரனும், மர்ஹூம் தங்கம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் - நஃபீஸா தம்பதியின் மகனுமான மருத்துவர் டி.எம்.இப்றாஹீம் தாஹா, 1483ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து - டிசம்பர் 09 அன்று நடந்த கலந்தாய்வின் (COUNSELLING) மூலம், இவர் மதுரை மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் DNB (GENERAL MEDICINE) பயில தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டி.எம்.இப்றாஹீம் தாஹா - MBBS பட்டப்படிப்பை முடித்தார் என்பதும்,
மேலும், டி.எம்.இப்றாஹீம் தாஹா - 2007-2008 கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், 1200க்கு 1157 மதிப்பெண்களைப் பெற்றதற்காக, அவருக்கு - “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2008” நிகழ்ச்சியின்போது, பாராட்டி பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கவை.
தகவல்:
M.S.செய்யித் இஸ்மாஈல் (ஹாங்காங்)
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 12:10 / 27.3.2016] |