தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சமூக விழிப்புணர்வு பரப்புரை பொதுக்கூட்டம், காயல்பட்டினம் அரூஸிய்யா திடலில், 24.03.2016. வியாழக்கிழமையன்று 19.00 மணியளவில், அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அய்யூப் தலைமையில், காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய - ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ துவக்கவுரையாற்ற, அவரைத் தொடர்ந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் அபூபக்கர் ஸித்தீக் ஸஆதீ உரையாற்றினார்.
நிறைவாக, “இஸ்லாமின் பெயரால் கட்டுக்கதைகள்” எனும் தலைப்பில் அமைப்பின் மாநில தணிக்கைக் குழு தலைவர் செய்யித் இப்றாஹீம் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. கூட்ட ஏற்பாடுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
அபூதாஹிர்
(செயலாளர் - ததஜ காயல்பட்டினம் கிளை)
ததஜ தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|