வீ-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டி, வரும் மே மாதம் துவங்கவுள்ளதாகவும், அணிகளுக்கான உரிமையாளர்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுற்றுப்போட்டிக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் கடந்த 7 வருடமாக, வல்ல இறைவனின் துணையுடன் - காயல் நகர விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்புடன் காயல் பிரிமியர் லீக் (KPL) கால்பந்து, கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகளை வீரர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காகவும், ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாகவும் நடத்தி வருகின்றது.
அதன் வரிசையில் இவ்வருடம் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே மாதம் V-United, VMS Jewellers "SilvOr" கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் (KPL) கால்பந்து போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வேண்டுகோளுக்கினங்க வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் (KPL) கால்பந்து போட்டி இன்ஷாஅல்லாஹ் இரண்டு தொடர்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான உரிமையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த இரண்டு தொடர்களிளும் பங்கேற்க விரும்புகின்ற வீரர்களுக்கான விண்ணப்ப படிவம் இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.
அதுபோலவே V-United, Blossoms கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் (KPL) கிரிக்கெட் போட்டி இன்ஷாஅல்லாஹ் மே 17ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான விண்ணப்பமும் இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்.
மேலதிக விபரங்களுக்கு...
அலி ஃபைஸல் - 00 852 9754 0095
தஸ்லீம் - 00 852 9743 1898
அலாவுத்தீன் - 99659 74253
சொளுக்கு முஹம்மது தம்பி - 98427 83160
ஜஹாங்கிர் - 91717 76763
ஆகியோருள் ஒருவரைத் தொடர்புகொள்ளலாம்.
இப்போட்டிகள் சிறப்புடன் நடைபெற, வழமைபோல் நமதூரின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் வீரர்களின் ஒத்துழைப்பை நாடுகிறது V-United, VMS Jewellers "SilvOr Cup & Blossoms Cup காயல் பிரிமியர் லீக் (KPL) சுற்றுப் போட்டிக் குழு.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
கடந்தாண்டு நடைபெற்ற வி-யுனைட்டெட் KPL போட்டிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |