காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனன)ப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூதுக்கு, 13.03.2016. அன்று திருமணம் நடைபெற்றது.
மத்ரஸாவின் ஆசிரியர்கள், அலுவலர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு திருமணம் நடைபெற்றால், அவர்களை வாழ்த்துவதற்காக மணவாழ்த்து நிகழ்ச்சியை நடத்தி, வாழ்த்திப் பிரார்த்திப்பதுடன், அன்பளிப்புகளையும் வழங்குவது ஹாமிதிய்யாவின் வழமை. அந்த அடிப்படையில், புதுமணவாழ்வு கண்டுள்ள ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூதுக்கு மணவாழ்த்து நிகழ்ச்சி, 20.03.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 15.00 மணியளவில் மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர் ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஜெ.எஸ்.அல்தாஃப் அஹ்மத் கிராஅத் ஓதினார். கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் வரவேற்புரையாற்றினார். மத்ரஸா மாணவர்களின் பைத் பாடலைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையுரையாற்றினார். ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ வாழ்த்துரையாற்றினார். மத்ரஸா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். மணமகன் ஏற்புரையாற்றினார்.
மத்ரஸா முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் இணைந்து மணமகனுக்கு வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் ஆகியவற்றைப் பரிசாக வழங்கினர். தொடர்ந்து, ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்கள் வரிசையில் நின்று, தமது தனிப்பரிசுகளை மணமகனுக்கு வழங்கினர்.
ஹாமிதிய்யா அலுவலகப் பொறுப்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, ஹிஃப்ழுப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், மத்ரஸா ஹாமிதிய்யா ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிப் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|