ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டதுடன், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் - காயல்பட்டினம் நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கான பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் இணையவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் தலைவர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (ஜக்வா) செயற்குழு கூட்டம் 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி அளவில் அல்ஹாஜ் M.M ஜஹாங்கிர் அவர்கள் இல்லத்தில் வைத்து எமது அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் M.A.S. செய்யது அபுதாஹிர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அமைப்பின் செயலாளர் அல்ஹாஃபிழ் M.A. செய்யது முஹம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். தலைமையுரைக்குப்பின் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. பின்னர் கீழ்கானும் தீர்மாங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. நமதூர் “SHIFA TRUST” மூலம் விண்ணப்பித்துள்ள ஒருவருக்கு மருத்துவ உதவியாக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் நானகு ஆயிரம் (Rs.4000/=) வழங்குவது
2. சிறு தொழில் செய்வதற்கு உதவி கேட்டு வரப்பெற்ற விண்ணப்பத்தை பரிசிலனை செய்து அவ்வகைக்கு ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் இரண்டாயிரம் கொடுப்பது எனவும்
3. நமதூர் இரயில்வே நிலையத்தில் COACH POSITION போர்டு வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை வெகுவாக பாரட்டுவதுடன், நமது அமைப்பின் பங்களிப்பாக மூன்று போர்டுக்கு ஆகும் செலவை ஏற்பது எனவும்
4. தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) முன்னின்று செயல்படுத்தும் நமதூரின் அனைத்து மஸ்ஜித்களில் பணியாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்கள் ஊக்கத்தொகையில் (ரமழான்) நமது மன்றம் பங்கு பெறுவது எனவும் அது வகை ஜகாத் மற்றும் ஸதகா கொடுக்க விரும்பும் நமது மன்ற உறுப்பினர்கள் செயலாளர் அல்ஹாஃபிழ் M.A. செய்யது முஹம்மது (+919442362353) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றியுரைக்குப்பின் அல்ஹாஃபிழ் நுஸ்கி ஆலிம் அவர்களின் துஆ ஸலவாத்துடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. குழுப்படம் பதிவு செய்த பின் அனைவரும் கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |