வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைப்பதென, காயல்பட்டினம் மமக அலுவலகத்தில் நடைபெற்ற - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.ஜோஸப் நொலாஸ்கோ தலைமை தாங்கினார். மமக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஆஸாத், மாவட்ட பொருளாளர் மோத்தி முஸ்ஸம்மில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர்களான கே.முஹம்மத் ரஃபீக், பஷீர் முஹம்மத், மருத்துவ சேவை அணி செயலாளர் ஜோதி, உடன்குடி நகர செயலாளர் முகைதீன் ஜிந்தா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செய்யித் இப்றாஹீம், தமுமுக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் காதர், காயல்பட்டினம் நகர செயலாளர் ஹஸன், மமக காயல்பட்டினம் நகர செயலாளர் ஐதுரூஸ், உள்ளிட்ட மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அயராது உழைப்பது...
(2) திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு - ஜாஹிர் ஹுஸைன் (காயல்பட்டினம்), ரஃபீக் (தூத்துக்குடி), ஐதுரூஸ் (காயல்பட்டினம்), அப்துல் அஜீஸ் (உடன்குடி), ஹஸன் (காயல்பட்டினம்) ஆகியோரையும்,
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு - தவ்ஃபீக் (சாத்தான்குளம்), சேக் முஹம்மத் (ஏரல்), முஹம்மத் கஸ்ஸாலி (சாத்தான்குளம்), சிக்கந்தர் பாதுஷா (செய்துங்கநல்லூர்), ஆஷிக் (சேதுக்குவாய்த்தான்) ஆகியோரையும்,
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு - புகாரீ (தூத்துக்குடி), முஹம்மத் ரஃபீக் (தூத்துக்குடி), ஜபருல்லாஹ் கான் (தூத்துக்குடி), எம்.எஸ்.பி.பஷீர் (தூத்துக்குடி), கனி (தூத்துக்குடி) ஆகியோரையும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக இக்கூட்டம் நியமிக்கிறது...
(3) 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தீவிர விழிப்புணர்வு பரப்புரை செய்து, அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற முயற்சிகள் மேற்கொள்வது...
(4) மிகவும் பழுதடைந்துள்ள தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட துணைச் செயலாளர் கே.முஹ்ஸின் முர்ஷித் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
K.முஹ்ஸின் (முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்)
படங்கள்:
ஐதுரூஸ்
தமுமுக / மமக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[படங்கள் இணைக்கப்பட்டன @ 08:04 / 04.04.2016.] |