காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை சந்திப்பின் வடமுனையில் அமைந்துள்ளது மஹான் ஜாஃபர் ஸாதிக் வலிய்யுல்லாஹ் தர்ஹா.
இங்கு, வழமை போல இவ்வாண்டும் கந்தூரி நிகழ்ச்சிகள் 31.03.2016. வியாழக்கிழமையன்று நடைபெற்றன. அன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. மாலையில் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.
மஃரிப் தொழுகைக்குப் பின், பண்ணை ஸலாஹுத்தீன் தலைமையில், ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாமும் - ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரிதத்தை உள்ளடக்கி உரை நிகழ்த்தினர்.
துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சிகளில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, கந்தூரி கமிட்டி தலைவர் ஆர்.ஜெ.எஸ்.முஹ்யித்தீன் ஸாஹிப், துணைத்தலைவர் எம்.ஐ.ஷாஹுல் ஹமீத், செயலாளர் பண்ணை எஸ்.ஏ.எம்.ஸலாஹுத்தீன், துணைச் செயலாளர் டீ.கே.செய்யித் மொகுதூம், உறுப்பினர்களான எம்.எம்.காஜா முஹ்யித்தீன், எஸ்.எல்.முஹம்மத் ரஃபீக், எம்.ஏ.சி.நெய்னா முஹம்மத், எஸ்.ஐ.முஹம்மத் ஹஸன், எம்.ஏ.சி.காதர், எஸ்.இ.ஷெய்க் அப்துல் காதிர், கே.எஸ்.அபூபைதா, ‘டீ ஸ்டால்’ நெய்னா முஹம்மத் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.C.ஈஸா ஷஃபீக்
2013ஆம் ஆண்டு நடைபெற்ற - மஹான் ஜாஃபர் ஸாதிக் வலிய்யுல்லாஹ் அவர்களின் கந்தூரி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |