தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெயலலிதா. தமிழ் மகன் ஹுசைன் - பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனுக்கு இடம் வழங்கப்படவில்லை.
சமத்துவ மக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதியும், தமீமுல் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் என இரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
1. Re:...அதீத நம்பிக்கை posted bymackie noohuthambi (kayalpatnam )[04 April 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43437
காத்திருக்கும்போது காற்றென்றே நம் பெயர் இருக்கட்டும்.
புறப்படும்போது புயலென்று புரியவைப்போம்.
அம்மா அவர்களின் அதீத நம்பிக்கை நம்மை அதிர வைக்கிறது. இந்த களத்தில் குருசேத்திரத்தில் வெற்றியா வீர மரணமா என்ற ஒரு நிலையில் கூட்டணிகளை எதிர்பார்க்காமல் வலிய வந்தவர்கள் சில முஸ்லிம்கட்சிகளை தன்னகத்தே இழுத்துக் கொண்டு இரட்டை இல்லை சின்னத்திலேயே அவர்கள் போட்டி போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 277 இடங்களில் களம் இறங்கியுள்ள அம்மா அவர்களின் அதீத நம்பிக்கையையும் துணிச்சலையும் பாராட்டவே வேண்டும்.
என்னதான் எதிரணியில் இருந்தாலும் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதையும் நச்சுக் கருத்துக்களை தூரமாக்கி கொள்வதையும் பழக்கமாக கொண்டவன் நான் என்பதாலேயே இந்த கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா...
3. யாருக்கு அதீத தைரியம் இருக்கிறது?. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[05 April 2016] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 43440
ஒரு மன்னன் தன் நண்பர்களுடன் வேட்டைக்கு போனானாம். போகும் முன்பு தன் நண்பர்களிடம், நண்பர்களே என்னிடம் இருக்கும் வலிமை மிக்க அம்புகளில் உங்களுக்கும் சற்று பகிர்ந்து அளிக்கிறேன். நானோ அல்லது உங்களில் யார் யாரோ நம்மை எதிர் கொள்ளும் பயங்கர கொடிய மிருகங்களை வீழ்த்துகிறார்களோ அவர்களுக்குறிய சன்மானத்தை பெறுவீர்கள்!
உங்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள அம்புகளுடன் நானுன் எதிர்க்கிறேன்! நம் கைவசமுள்ள அனைத்து அம்புகளையும் நான் மட்டும் உபயோகித்து எதிர் கொள்ள நினைப்பவனல்ல நான்.என்னிடமுள்ள குறைந்த அம்புகளுடன் நான் எதிர்கொள்ள என்னிடம் தைரியமும் இருக்கிறது ,நம்பிக்கையும் இருக்கிறது என்றானாம் அந்த அரசன்.
இப்பொழுது அதீத தைரியம் யாரிடம் இருக்கிறது ?
தன்னிடம் இருக்கும் குறைவான அம்புகளுடன் வேட்டையை வெற்றிகொள்ள நினைக்கும் அரசனிடமா?
(அல்லது)
அத்தனை அம்புகளையும் தானே தனக்கு பாதுகாப்பிற்க்காக வைத்துக்கொண்டு வேட்டைக்கு கிளப்பும் அரசனிடமா?
அதீத தைரியத்திற்குள்ள உண்மையான பொருள் அதற்குறிய தகுதி முதல் மன்னனுக்குத்தான் உண்டு என்பது நானறிந்தவரை புரியமுடிகிறது!
வேட்டையின் முடிவை பார்ப்போம் யார் யாரெல்லாம் எதையெல்லாம் வீழ்த்துகிறார்கள் என்று.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross