தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களை வாக்களிக்கத் தூண்டும் வகையில் அரசால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், 10.04.2016. ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) 15.30 மணிக்கு, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி கேளரங்கில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் மாவட்ட தலைமை அலுவலருமான ம.ரவிக்குமார் பங்கேற்று, விழிப்புணர்வு உரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆர்ச் வரை வாக்காளர் விழிப்புணர்வு பேரணியும் நடைபெறவுள்ளது.
அரசு அலுவலர்களும், பொதுமக்களும் இவ்வனைத்து நிகழ்ச்சிகளிலும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
|