காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 89ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.04.2016. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 10 அன்று .இரண்டாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ நிகழ்த்தினார்.
குளிப்பின் சட்டங்கள், முஸ்லிம் சமூகத்தின் களையப்பட வேண்டிய அவலங்கள் உள்ளிட்டவை குறித்து அவரது உரையில் செய்திகள் இடம்பெற்றன.
ரஜப் 03ஆம் நாள் (ஏப்ரல் 11) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும் - ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு (கடந்தாண்டு) இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1437ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |