திடக்கழிவுகள் கொண்டு பயோ காஸ் உற்பத்தி செய்து, அதன் மூலம் பெறப்படும் மின்சாரம் கொண்டு தெரு விளக்குகளை இயக்கும் திட்டத்தினை
தமிழக அரசு 2013ம் ஆண்டு அறிவித்தது. மொத்தம் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், 5 மாநகராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும்
அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற மாநகராட்சிகள்:
திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற நகராட்சிகள்:
காயல்பட்டினம், ஹோசூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல், ராஜபாளையம், நாகர்கோயில், கும்பகோணம், பள்ளிப்பாளையம், பூந்தமல்லி,
மேட்டூர்,ஆவடி, கடலூர், பல்லாவரம், திருவண்ணாமலை, கரூர், உதகமண்டலம்,பொள்ளாச்சி, பழனி, திருத்தணி, திருச்செங்கோடு,
நாகபட்டினம், மேட்டுப்பாளையம், கோபி செட்டிபாளையம்
இந்த திட்டம் பெற்ற காயல்பட்டினம் நகராட்சி, மாசு கட்டுப்பட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் (CONSENT TO ESTABLISH - CTE), கட்டுமானங்களை துவக்கியதும், கடந்த ஆண்டு -
தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவானப்பின் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து கட்டுமான அனுமதி பெற்றதும் நினைவிருக்கலாம்.
கடந்த மாதம், இந்த திட்டத்தினை பெற்ற நகராட்சிகளில் ஒன்றான பல்லாவரம் நகராட்சியும் கட்டுமான அனுமதி இல்லாமல், பணிகளை துவக்கி 90
சதவீதம் வேலைகளை முடித்து விட்டதாக தீர்ப்பாயத்தில் கிருஷ்ணன் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்த விசாரணை குறித்து மார்ச் 9 அன்று THE NEW INDIAN EXPRESS நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்தியினை தொடர்ந்து, மார்ச் 14 அன்று THE NEW INDIAN EXPRESS நாளிதழ் - பல்லாவரம் நகராட்சி மட்டுமல்லாமல், இந்த திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளாட்சி மன்றங்களில் குறைந்தது 18 உள்ளாட்சி மன்றங்கள், அனுமதி இல்லாமல் பணிகளை மேற்கொண்டு வருவதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையிலான செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி குறித்து, ஏப்ரல் 7 அன்று விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயம், பயோ காஸ் திட்டத்தை அமல்படுத்தும் ஏனைய உள்ளாட்சி மன்றங்கள்
- முறையாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளனவா என அறிக்கையை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்
உறுப்பினர் - செயலாளர் வாயிலாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
ஏப்ரல் 8, 2016 தேதிய THE NEW INDIAN EXPRESS நாளிதழ் செய்தி
|