திடக்கழிவுகள் கொண்டு பயோ காஸ் உற்பத்தி செய்து, அதன் மூலம் பெறப்படும் மின்சாரம் கொண்டு தெரு விளக்குகளை இயக்கும் திட்டத்தினை
தமிழக அரசு 2013ம் ஆண்டு அறிவித்தது. மொத்தம் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், 5 மாநகராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும்
அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற மாநகராட்சிகள்:
திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற நகராட்சிகள்:
காயல்பட்டினம், ஓசூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல், ராஜபாளையம், நாகர்கோயில், கும்பகோணம், பள்ளிப்பாளையம், பூந்தமல்லி,
மேட்டூர்,ஆவடி, கடலூர், பல்லாவரம், திருவண்ணாமலை, கரூர், உதகமண்டலம்,பொள்ளாச்சி, பழனி, திருத்தணி, திருச்செங்கோடு,
நாகபட்டினம், மேட்டுப்பாளையம், கோபி செட்டிபாளையம்
பல உள்ளாட்சி மன்றங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இன்றியே பணிகளை துவக்கிவுள்ளன என்ற குற்றச்சாட்டினை தொடர்ந்து, அது குறித்து - மே 9 தேதிக்குள், அறிக்கை சமர்ப்பிக்க - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, கடந்த வாரம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மேலும் - இத்திட்டங்களில், மாநில அளவில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளன என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
24 உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளின் கொள்திறன் - ஒவ்வொன்றுக்கும் 5 TPD (TONNES PER DAY) ஆகும். ஈரோடு, திருப்பூர்
மாநகராட்சிகள் மற்றும் ஓசூர் நகராட்சிக்கு 10 TPD கொள்ளளவிலும், மேட்டுப்பாளையம் மற்றும் கோபி செட்டிப்பாளையத்திற்கு 3 TPD
கொள்ளளவிலும் பணிகள் வழங்கப்பட்டன.
மேலும் - 3 TPD கொள்ளளவு கட்டுமான பணிகள் மற்றும் 7 ஆண்டுகள் பராமரிப்பு பணிகளுக்கு என மதிப்பீட்டு தொகையாக 50 லட்சம் ரூபாய்
நிர்ணயம் செய்யபப்ட்டது.
5 TPD கொள்ளளவு கட்டுமான பணிகள் மற்றும் 7 ஆண்டுகள் பராமரிப்பு பணிகளுக்கு என மதிப்பீட்டு தொகையாக 90 லட்சம் ரூபாய் நிர்ணயம்
செய்யபப்ட்டது.
10 TPD கொள்ளளவு கட்டுமான பணிகள் மற்றும் 7 ஆண்டுகள் பராமரிப்பு பணிகளுக்கு என மதிப்பீட்டு தொகையாக 160 லட்சம் ரூபாய் நிர்ணயம்
செய்யபப்ட்டது.
சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகம் ஆணையத்தினால் (COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION) தயார் செய்யப்பட்ட டெண்டர்
ஆவணங்களை மூலமாக கொண்டு, 2013, 2014 காலகட்டங்களில் - 29 உள்ளாட்சி மன்றங்களும், தனி, தனியாக டெண்டர்கள் விட்டன.
29 உள்ளாட்சி மன்றங்களில் 26 உள்ளாட்சி மன்றங்களின் பணிகளை MAILHEM என்ற புனே நிறுவனம் பெற்றது.
நாகப்பட்டினம் நகராட்சியின் பணிகளை ENPROTECH என்ற மற்றொரு புனே நிறுவனம் பெற்றது.
இறுதியாக டெண்டர் விட்ட காயல்பட்டினம் மற்றும் ஓசூர் நகராட்சி பணிகளை SK & Co என்ற சேலம் நிறுவனம் பெற்றது.
டெண்டர் ஆவணங்கள்படி, மதிப்பீட்டு தொகை - 7 ஆண்டுகளுக்கான பராமரிப்பு பணிகளுக்கும் (OPERATION AND MAINTENANCE) சேர்த்து என இருந்தும், (காயல்பட்டினம் நகராட்சி தவிர்த்து) ஏறத்தாழ அனைத்து உள்ளாட்சி மன்றங்களும் - பராமரிப்பு பணிகளுக்கு என தனியாக சுமார் 70 - 80 லட்ச ரூபாய்க்கு ஒப்புதல் கொடுத்துள்ளன.
திண்டுக்கல் நகராட்சி தீர்மானம் பக்கத்தில் இருந்து
இதன் மூலம் - அடுத்த 7 ஆண்டுகளில், உள்ளாட்சி மன்றங்களுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் மதிப்பீட்டு தொகையை விட 10 சதவீதத்திற்கு மேலாக பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்கு - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையிலான குழு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்ற அரசானை விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன.
இந்த முறைக்கேடு தவிர, காயல்பட்டினம் உட்பட ஏறத்தாழ அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் - பல முக்கிய டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
குறிப்பாக, டெண்டர் ஆவணங்கள்படி, பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள், Quality and Cost Based System (QCBS) என்ற தகுதி அடிப்படையில் பரிசீலனை செய்யப்படவேண்டும்.
காயல்பட்டினம் நகராட்சியில் மூன்று ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டாலும், QCBS முறை மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் தேர்வு செய்யப்படாமல், L1 என்ற குறைந்த விலை ஒப்பந்தப்புள்ளிகள் தேர்வு முறையில் - SK & Co என்ற உரம் விற்பனை செய்யும், சேலம் நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைக்கேடுகள் குறித்த செய்தி, ஏப்ரல் 8 தேதிய THE NEW INDIAN EXPRESS நாளிதழில் வெளிவந்துள்ளது.
ஏப்ரல் 8, 2016 தேதிய THE NEW INDIAN EXPRESS நாளிதழ் செய்தி
|