காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 89ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.04.2016. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 12 அன்று மூன்றாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் ஜெ.ஏ.தாவூத் மாஹின் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
தொழுகையின் சட்டதிட்டங்கள், அதன் மகத்துவங்கள், தொழுகையை விட்டோரின் நிலை, உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
ரஜப் 05ஆம் நாள் (ஏப்ரல் 13) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ அபூதாஹிர் பாக்கவீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு (கடந்தாண்டு) நான்காம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1437ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |