எழுத்து மேடை மையம், தமிழ் நாடு ஏற்பாட்டில் சூழலுக்குகந்த, செலவு குறைந்த, அழகிய வீடுகள் என்ற மைய கருத்தில், கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 16, 2016, சனிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் இந்த நிகழ்ச்சி, ஹாஜி அப்பா தைக்கா பள்ளிவாசல் எதிரில் உள்ள
ஹனியா சிற்றரங்கத்தில் (துஃபைல் வணிக வளாகம், மெயின் ரோடு) நடைபெறும்.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
அன்பார்ந்த காயல்வாசிகளே!
நமதூரில் கட்டிட வேலை நடக்காத நாட்களும் தெருக்களும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கட்டுமானத் தொழில் பரவலாக நடந்து வருகின்றது.
நாளுக்கு நாள் பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்து வரும் நமதூரின் கட்டுமானத்தேவைகளினால் ஏற்படும் பின்விளைவுகளாக சூழலியல் பாதிப்பையும் கட்டுமான செலவுகள் கூடுதலாவதையும் கண்கூடாக பார்க்க முடிகின்றது. இந்த சிரமத்தை பொதுமக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்துதான் சுமக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பாக கட்டுமானத் துறையைச் சார்ந்த கலைஞர்கள், பணியாளர்கள், பொறியாளர்கள், நிறுவனத்தினருடனும் பயனாளிகளாகிய பொதுமக்களுடனும் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த நிகழ்வில் “ The Life & Architecture of Laurie Baker “ , “ IITM GFRG demo building 2013” என்ற தலைப்பில் இரு ஆவணப்படங்களையும் திரையிடவுள்ளோம்.
வீடு கட்டிக்கொண்டிருக்கும், இனி கட்டப்போகும் அனைவருக்கும் பலனளிக்கக் கூடிய இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு – எந்த ஒரு அமைப்பையும் சாராத சுயேச்சையான சிந்தனைத் தளமாகும். மேலதிக விபரத்திற்கு தொடர்பு கொள்ளவும் - 9171324824.
தகவல்:
சாளை பஷீர்
ஒருங்கிணைப்பாளர், எழுத்து மேடை மையம், தமிழ் நாடு |