காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த மாணவர் எம்.எம்.சுல்தான் ராஷித். ப்ளஸ் 2 தேர்வில் சிறப்புத் தேர்ச்சி (மெரிட்) அடிப்படையில், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்திலுள்ள கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் 2010ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவில் சேர்ந்தார்.
5 ஆண்டுகள் பயின்று முடித்துத் தேறிய அவருக்கு, 08.04.2016. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது, கல்லூரியின் முதல்வர் டாக்டர் வடிவேல் முருகன், எம்.பி.பி.எஸ். மருத்துவருக்கான பட்டச் சான்றிதழை வழங்கினார்.
முன்னதாக, அக்கல்லூரியில் பயின்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெறும் முஸ்லிம் மாணவ-மாணவியருக்கு, கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள இகாமா அறக்கட்டளை சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உளத்தூய்மையுடன் மருத்துவச் சேவையாற்றுவதற்கு அவர்களிடம் உறுதிமொழி பெறப்பட்டது.
ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, விருந்துபசரிப்புடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், பட்டம் பெறும் மாணவ-மாணவியர், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
கள உதவி:
O.A.K.ஷஃபீயுல்லாஹ் |