15.04.2016., 16.04.2016. ஆகிய நாட்களில் (நாளையும், நாளை மறுநாளும்) கடலோர தமிழ்நாட்டில் கடும் வெப்ப வானிலை இருக்கும் என்று அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், முன்னேற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர தமிழ்நாட்டில் வெப்ப அனல் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலையானது 35 செல்சியஸ் முதல் 41 செல்சியஸ் வரை அதிகாpக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் 15.04.2016 மற்றும் 16.04.2016 ஆகிய இரு தினங்களில் வெப்பம் தாக்கவண்ணம் உரிய ஆடைகளை அணியவும், வெப்பத்திலிருந்து கண்களை பாதுகாக்கும் வகையில் உரிய உபகரணங்களை அணியவும், உடலில் நீர்ச்சத்து குறையாவண்ணம் உரிய நீர் பானங்களை கையில் கொண்டு செல்லவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுமான வரையில் நண்பகல் 12 மணி முதல் மாலை 3மணி வரை வெயிலில் நின்று செய்யும் பணிகளை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் முடிந்த வரை இந்த இரு தினங்களிலும் நண்பகல் 12 மணி முதல் மாலை 3மணி வரை வீட்டை வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தங்களிடம் உள்ள கால்நடைகளை நிழல்தரும் இடங்களில் நிறுத்தி அதிக நீர் வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எந்த நபராவது சூரிய வெப்பத்தினால் தாக்கப்பட்டு கீழே விழுந்தால் அவரை குளிர்ச்சியான பகுதிக்குக் கொண்டு சென்று நீரினாலான துணியால் அவரது உடலை முழுவதும் துடைத்து உடலின் வெப்பநிலையினை குறைக்கவேண்டும். மேலும் அவருக்கு ORS (ORAL REHYDRATION SALT) பானம் மற்றும் எழுமிச்சை சர்பத் போன்ற பானங்களை வழங்கி நீர் வெளியேறாமல் தடுத்து அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு கொண்டு சென்று முதல் சிகிச்சை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசர கால உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி 1077-க்கு தொடா;பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |