ஐக்கிய அரபு அமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லாவாசிகள் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
01.04.2016. வெள்ளிக்கிழமையன்று, துபை அஸ்கான் சமூகக் கூடத்தில், மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் அலீ ஃபாஸீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை, டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் நெறிப்படுத்த, மாணவர் சித்தீக் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ வரவேற்புரையாற்றினார்.
அமைப்பு குறித்தும், காயல்பட்டினத்தில் - அமைப்பால் நடத்தப்பட்டு வரும் திருக்குர்ஆன் மக்தப் குறித்தும் - மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ விளக்கிப் பேசினார்.
பல்வேறு தேவைகளை முன்வைத்து மஹல்லாவாசிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவி ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
மஹல்லாவில் இயங்கும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், இளைஞர் ஐக்கிய முன்னணி ஆகிய நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கடிதங்களும் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு, அவை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது.
நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இதில், அமீரகம் வாழ் குருவித்துறைப் பள்ளி மஹல்லாவாசிகள் சுமார் 45 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவும், அஸ்ர் தொழுகைக்குப் பின் தேனீரும் வழங்கப்பட்டது.
துபையிலிருந்து...
தகவல் & படங்கள்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன் மூலமாக
ஹாஃபிழ் K.M.இஃப்திகாருத்தீன் ஷெய்க் அப்துல்லாஹ்
அமீரக குருவித்துறைப்பள்ளி மஹல்லாவாசிகள் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|