7வது முறையாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி, ஈரோடு மேற்கு, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மாற்றம் செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, 7வது முறையாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை மாற்றம் செய்து அறிவித்துள்ளார். இதில், அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், ப.மோகன், பி.பழனியப்பன் ஆகிய 3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பாளையங்கோட்டை தொகுதிக்கு அ.தமிழ்மகன் உசேனுக்கு பதிலாக எஸ்.கே.ஏ.ஹைதர் அலி போட்டியிடுகிறார். அரக்கோணம் (தனி) தொகுதிக்கு புதிய வேட்பாளராக சு.ரவியும், திருச்சி கிழக்கு தொகுதிக்கு வெல்லமண்டி நடராஜனும் புதீய வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு குப்புசாமிக்கு பதிலாக அமைச்சர் பி.பழனியப்பன், ஈரோடு மேற்கு தொகுதிக்கு வரதராஜனுக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், சங்கராபுரம் தொகுதிக்கு அமைச்சர் ப.மோகன், கோவில்பட்டி தொகுதிக்கு ராமானுஜம் கணேசுக்கு பதிலாக கடம்பூர் ராஜூவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
தகவல்:
விகடன் இணையதளம்
|