குவைத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சியில், குவைத் வாழ் காயலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
குவைத் காயல் நல மன்ற பொதுக்குழு கூட்டம் 08-04-16 வெள்ளி கிழமை அன்று Salmiya வில் மன்ற தலைவர் S.M. ஹசன் மௌலானா இல்லத்தில் நடைபெற்றது.
S.A. நளீம் அஹமது தலைமை தாங்கினார். மாணவி M.M. உம்முல் ஹைரி (D/O S.M.T. மொகுதூம் முஹம்மது) கிராஅத் ஓதினார். மன்ற தலைவர் அனைவரையும் வரவேற்று, மன்ற பணிகள் மற்றும் ஊர் நடப்புகளை விவரித்தார்.
SHIFA வின் அண்மை கால நடவடிக்கை மற்றும் KMT Hospital மூலமாக இரவு நேர மருத்துவ சேவை குறித்து விவரித்தார். இரவு நேர மருத்துவ சேவையை அனைத்து உறுப்பினர்களும் பாராட்டினர்.
பின்னர், ஊர் நடப்புகள் மற்றும் பொதுவான விஷயங்கள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் கருத்து பரிமாறி கொண்டனர். கல்வி மற்றும் மருத்துவ உதவி வேண்டி வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு Rs. 60,000/- உதவி கொடுக்கப்பட்டது.
புதிய உறுப்பினர் முஸ்தாக் அஹ்மத் (முன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர்) மன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதற்கும், சந்தா வசூலிப்பதற்கும் வசதியாக, கீழ் கண்ட coordinators நியமிக்கப்பட்டார்கள்.
S.M.T. மொகுதூம் முஹம்மது – KUWAIT CITY & JAHRA
S.M.M. அபு தாஹிர் – SALMIYA
L.T. அஹமது முஹியதீன் – FAHAHEEL & FINTAS
M.H. நூகு சாஹிப் - MAHBOULA & ABBASIYA
இறுதியாக இரவு விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது. சலவாத்து மற்றும் கஃபாராவுடன் இனிதாக கூட்டம் முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.T.மொகுதூம் முஹம்மத்
(துணைச் செயலாளர் - குவைத் கா.ந.மன்றம்)
குவைத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|