காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், யு.கே.ஜி. பயின்று முடித்து, முதல் வகுப்பில் நுழையும் மழலை மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்தும் நோக்குடன் 20ஆவது பட்டமளிப்பு விழா, 16.04.2016. சனிக்கிழமையன்று 14.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.
எல்.கே.ஜி. மாணவி எச்.எம்.ஃபாத்திமா சுலைஹா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, ஆசிரியை நவாஜியா அனைவரையும் வரவேற்றார்.
கோடை விடுமுறையில் மாணவ-மாணவியரை அவர்கள்தம் பெற்றோர் வழிநடத்த வேண்டிய முறைகள் குறித்து விழா தலைவர் உரையாற்றினார்.
இவ்விழாவில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவியரிடையே இருக்க வேண்டிய ஒழுக்க வாழ்வியல் குறித்து சிறப்புரையாற்ற, அவரும் - பள்ளி தாளாளரும் மழலை மாணவ-மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினர்.
ஆசிரியை ரா.செல்வநங்கை நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. நிறைவில், குழுப்படம் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு (2015) பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட மழலையர் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|