தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் நாளன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளராக, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், இன்று அவர் தொகுதியில் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தனக்கு ஆதரவு கோரி முதன்முறையாக காயல்பட்டினம் வந்த அவருக்கு, காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள செய்யித் ஆலிம் கட்டிடத்தில், தொழிலதிபர் எஸ்.அக்பர்ஷா தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. அதிமுக, சமக திருச்செந்தூர் ஒன்றிய - காயல்பட்டினம் நகர நிர்வாகிகள், அங்கத்தினர், நகர பொதுமக்கள் இதன்போது திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, நடிகர் சரத்குமாரை ஆதரித்து - அவரது மனைவி ராதிகா சரத்குமார் நேற்று (18.04.2016. திங்கட்கிழமை) மாலையில் காயல்பட்டினம் நகரின் முக்கிய வீதிகள் உள்ளிட்ட திருச்செந்தூர் தொகுதி பகுதிகளில் பரப்புரை செய்தமை குறிப்பிடத்தக்கது.
|