சாகுபுரம் அரிமா சங்கம் சார்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, DCW ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சாகுபுரத்தில் அரிமா சங்க கவர்னரின் வருடாந்திர வருகையை முன்னிட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான நல்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரிமா சங்க கவர்னரின் வருடாந்திர வருகை தின விழா சாகுபுரம், டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. அரிமா சங்க தலைவர் யோகீஸ்வரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் சுப்பிரமணியன் அரிமா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 நபர்களுக்கு இலவச தையல் மெஷின் மற்றும் மருத்துவ உதவியும், காயல்பட்டணம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள், ஷீல்டுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முன்னதாக சிங்கித்துறையில் உள்ள சமுதாய நலக் கூடத்தின் மேல் பகுதியில் ரூ.3 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு அருந்தும் கூடத்தை கவர்னர் சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் செல்வராஜபுரம் நடுநிலைப்பள்ளியின் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.1லட்சம் செலவில் கழிவறை புதுப்பிக்கப்பட்டது. இதனை கவர்னர் பார்வையிட்டார்.
தொடர்ந்து அடைக்கலாபுரம் குழந்தைகள் காப்பகத்திற்கு பால்பவுடர் மற்றும் ஆறுமுகநேரி லைட் வெல்பர் சோசியல் டிரஸ்ட்க்கு மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் உதவித்தலைவர் (பணியகம்) ஜெயக்குமார், செயல்உ தவித்தலைவர் (காஸ்டிக்சோடா) சுபாஷ் டாண்டன் மகளிர் அரிமா சங்க தலைவர் நித்யகல்யாணி யோகீஸ்வரன், அரிமா சங்க செயலாளர் சித்திரைவேல், பொருளாளர் நாகசுப்பிரமணியன், மாவட்ட அமைச்சரவை செயலாளர் லயன் எஸ்.சந்திரசேகர். மண்டல செயலாளர் லயன் கே.லிங்கம், மண்டல தலைவர் லயன் த.கணேசன், வட்டார தலைவர் கமலா சுயம்புராஜன், முன்னாள் ஆளுநர் கா.சுயம்புராஜன் ஆறுமுகநேரி, காயல்பட்டணம், ஆத்தூர் தாமிரபரணி, திருச்செந்தூர் அரிமா சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை சீனியர் ஆபிசர் பிரகாஷ் தொகுத்து வழங்கினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCW நலத்திட்ட உதவிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|