ஏழை மாணவர்களுக்கு இலவச பள்ளிச் சீருடை வழங்குவதற்கு அனுசரணை கோரி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவை சார்பில் பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது:-
ஒரு சட்டையின் பெறுமதியில் ஒரு மாணவனின் எதிர்காலம்..!!!
அஸ்ஸலாமு அலைக்கும் ...!
நாமெல்லாம் படித்த நம்ம L K ஸ்கூலில் பயிலும் 150 மாணவர்கள் சீருடை வாங்கிட போதுமான வசதியின்றி உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா.. ? அன்பர்களே..!
நீங்கள் அணியும் ஒரு சட்டையின் பெறுமதியை [1200/=] ஒரு மாணவனுக்கு வழங்கினால் அது அவனது ஒரு ஜோடி சீருடைத் தேவையை நிறைவு செய்து விடும் சகோதரர்களே ...! இவர்களுக்கு உதவிட முன் வாருங்களேன். ப்ளீஸ் ..!
இறைவன் உங்களுக்கு வழங்கியதிலிருந்து நீங்கள் செய்யும் இந்த சிறு உதவி கூட இன்ஷா அல்லாஹ் ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொருளாதரத்தை நல்ல வழியில் செலவு செய்து வரும் நீங்கள், தேவை உடையோராக இருக்கும் நம் பள்ளி மாணவர் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ நிச்சயம் உதவிடுவீர்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் உங்கள் பதிலுக்காக ...
நீங்கள் நன்மையை நாடி எதனை செலவு செய்த போதும் அதனை பண் மடங்காக்கி திருப்பித் தர அல்லாஹ்வே போதுமானவன் ..!
தொடர்புக்கு :
L K பயின்றோர் பேரவை
ஆசிரியர் M .A .புஹாரி
+919842789817
ஆசிரியர் அஹமத் மீரா தம்பி
+919487775765
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:...எனது நன்றியை தெரிவிக்கிறேன் posted byBuhary (Abu dhabi )[04 June 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43999
அல்ஹம்துலில்லாஹ் இவர் போன்று ஆசிரியர் அமைய நாம் கொடுத்துவைக்கப் பட்டவர்கள் தான். அப்து ரவூப் சார் அவர்களின் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை அலாதியானது, கோபத்தில் கூட மென்மையான சப்தபிரயோகம் மட்டுமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross