தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் நாளன்று நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி கேளரங்கில் - மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்தல் பார்வையாளரும், மத்திய அரசின் கள விளம்பரத்துறை இயக்குநருமான ஆஷிஸ் கோயல் பார்த்து ரசித்து - மாணவ-மாணவியரையும், பயிற்சியளித்த ஆசிரியையரையும் பாராட்டிப் பேசினார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது உடனிருந்தனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross