காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், யு.கே.ஜி. பயின்று முடித்து, முதல் வகுப்பில் நுழையும் 41 மழலை மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்தும் நோக்குடன் பட்டமளிப்பு விழா, 13.04.2016. புதன்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி நிர்வாகி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி தலைமை தாங்கினார். செயலர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன், துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான், முதல்வர் டி.ஸ்டீஃபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரும், சென்னை கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன் கம்பெனி பங்குதாரருமான கே.இசட்.பாதுல் அஸ்ஹப் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மழலை மாணவ-மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்க, அவரைத் தொடர்ந்து அவையோர் வழங்கினர்.
முன்னதாக, மாணவி எம்.டீ.ஆயிஷா தின்னூர் கிராஅத் ஓதினார். ஆசிரியை இசட்.ஃபாத்திமா ஸீரீன் வரவேற்புரையாற்றினார். நிறைவில் ஆசிரியை பி.சித்தி ஃபர்ஸானா நன்றி கூறினார்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆசிரியை எம்.என்.ஏ.ஹஸீன் முஃப்லிஹா நெறிப்படுத்தினார். தலைமையாசிரியை எம்.ஒய்.ஹஸீனா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற மழலையர் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|