காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 89ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.04.2016. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 23 அன்று 15ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, இலங்கை - கொழும்பு தெவட்ட கஹவிலுள்ள குத்புஸ் ஸைலான் உதுமான் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாமும் - கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.வஜ்ஹுத்தீன் மின்ஹாஜீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ ஆகியோர் நிகழ்த்தினர்.
ரஜப் 16ஆம் நாள் (ஏப்ரல் 24) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, திருச்சி மத்ரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் ஈஸா, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ ஆகியோர் வழங்கவுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 15ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1437ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |