காயல்பட்டினம் நகராட்சி எல்லையில் இருந்து செயல்புரியும் DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை
(ENVIRONMENTAL CLEARANCE) ரத்து செய்ய கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தொடர்ந்த வழக்கினை - தேசிய பசுமை
தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளை, இவ்வாண்டு பிப்ரவரி 15 அன்று தள்ளுபடி செய்தது.
அந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி, KEPA சார்பாக - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில், மனு (REVIEW PETITION) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ் வெளியிட்டுள்ள
அறிக்கை வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சி எல்லையில் இருந்து செயல்புரியும் DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல்
அமைச்சகம், பிபரவரி 2014இல், சுற்றுச்சூழல் அனுமதி (ENVIRONMENTAL CLEARANCE) வழங்கியது.
1958ம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் செயல்புரிந்து வரும் இந்நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள உடல் நலன் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகளை
மேற்கோள்காட்டி - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA), 2014 மே மாதம் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல
கிளையில், வழக்கு தொடர்ந்தது. சுமார் 22 மாதங்கள் நடந்த இவ்வழக்கில் தீர்ப்பு - கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியானது. அந்த தீர்ப்பின்படி,
KEPA அமைப்பின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA), வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்தது. அதன் அடிப்படையில்,
தீர்ப்பினை எதிர்த்து - உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்னர், தேசிய பசுமை தீர்ப்பாயத்திலேயே - மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என
முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில், தற்போது - மறு சீராய்வு மனு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறு சீராய்வு மனுவில், தீர்ப்பில் உள்ள அடிப்படை தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
--- DCW தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயாரித்த PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனம் - தகுதி இழந்த பின்பு, மே 2011இல் புதிய விண்ணப்பம் சமர்ப்பித்திருந்ததாகவும், அந்த
விண்ணப்பம் அடிப்படையில் - 3 ஆண்டுகள் கழித்து (2014இல்), தகுதி பெற்றதாகவும், எனவே - மே - ஜூலை 2011 காலகட்டத்தில் - DCW
தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயாரித்த அந்த நிறுவனத்திற்கு, ஆவணங்கள் தயாரிக்க தகுதி இருந்ததாக கருத வேண்டும் என்றும் தீர்ப்பு
தெரிவித்திருந்தது.
--- KEPA சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவில், 2014இல் PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள் அடிப்படையிலான அனுமதி (ACCREDITATION), 2012இல் அந்நிறுவனம் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்திற்கு தான் என்றும், 2011ம் ஆண்டு விண்ணப்பத்திற்கு இல்லை எனவும், அது குறித்த ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனம் 2012இல் சமர்ப்பித்த விண்ணப்பம், தீர்ப்பாயத்தில் மறைக்கப்பட்டு - தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--- DCW தொழிற்சாலைக்கு PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட ஆவணத்தில் உள்ள சுற்றுச்சூழல் சோதனை அறிக்கைகள், NABL தகுதி சான்றிதழ் பெற்ற எந்த நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்டன என்ற விபரம் இல்லை என்ற KEPA அமைப்பின் குற்றச்சாட்டிற்கு - தன் சொந்த ஆய்வு கூடத்தில் அந்நிறுவனம் ஆய்வுகள் செய்தது என்றும், சொந்த ஆய்வு கூடங்களுக்கு தகுதி சான்றிதழ் தேவை இல்லை என்றும் தீர்ப்பு தெரிவித்திருந்தது.
--- PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனம், சொந்த ஆய்வு கூடத்தை பயன்படுத்தவில்லை என்றும், EKDANT ENVIRO SERVICES PRIVATE LIMITED என்ற NABL தகுதி பெறாத, ஆய்வு கூடம் மூலமாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் மறு சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
--- கொட்டமடைக்காடு - காப்பு காடாக (RESERVED FOREST), 1958இல் இருந்திருக்கலாம் என்றும், அதற்கான கிராம படம் மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போதும் அது காப்பு காடாக இருப்பதற்கு ஆதாரங்கள் இல்லை என தீர்ப்பு தெரிவித்திருந்தது.
--- KEPA சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவில், காயல்பட்டினம் வட பாக கிராமத்தின் தற்போதைய கிராம படம் தாக்கல் செய்யப்பட்டு, அதிலும் கொட்டமடைக்காடு - காப்பு காடு (RESERVED FOREST) என உள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவைகள் தவிர - தீர்ப்பில் உள்ள, மேலும் பல்வேறான தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு, இந்த மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |