DCW நிறுவனத்தின் டிசம்பர் 31, 2015 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) பிப்ரவரி 12 அன்று வெளியாகின.
இந்த காலகட்டத்தில், DCW நிறுவனத்தின் வரவு 278 கோடி ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு: 349 கோடி ரூபாய்), வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 27 லட்சம் ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு லாபம்: 5.57 கோடி ரூபாய்) இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (October 2014 – December 2014) வரவு 258 கோடி ரூபாய், நஷ்டம் 33 கோடியே 73 லட்சம் ரூபாய் ஆகும்.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 46 கோடி ரூபாய் (இலாபம் - 10 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள
காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 100 கோடி ரூபாய் (இலாபம் - 43 லட்சம் ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 125 கோடி ரூபாய் (இலாபம் - 2.82 கோடி ரூபாய்), புதிதாக செயல்பட துவங்கியுள்ள Synthetic Iron Oxide Pigment Plant (SIOPP) பிரிவின் வரவு 2 கோடியே, 58 லட்சம் ரூபாய் (நஷ்டம் - 1.05 கோடி ரூபாய்).
|